ஆயுத பூஜைக்கு சொந்த ஊர் போனவங்களுக்கு குட் நியூஸ்! நெல்லை டூ சென்னைக்கு இன்று ஸ்பெஷல் ரயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக நெல்லையில் இருந்து இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் புறப்படும் நேரம் உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

ஆயுத பூஜை மற்றும் வார இறுதி நாள் விடுமுறை ஆகியவற்றால் 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. இதனால், சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். ஞாயிற்றுக்கிழமையான இன்றுடன் விடுமுறை முடிவடைந்துள்ளதால், சொந்த ஊர் சென்ற மக்கள் இன்று சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளனர். இதனால் ரயில், பஸ்களில் டிக்கெட் அனைத்தும் கிட்டத்தட்ட புக் ஆகிவிட்டது.

rail southern railway nellai

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவற்றில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்த்துவிட்டன. குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா என்பதால் தசரா கொண்டாட சென்ற மக்களும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்புவதால் திருச்செந்தூர், உடன்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதனிடையே பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு நெல்லையில் இருந்து செங்கல்பட்டுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக ரயில்வே கூறியதாவது:- நெல்லையில் இருந்து மதுரை வழியாக செங்கல்பட்டு வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில் (வண்டி எண் 06003) 7.55 மணிக்கு திருமங்கலம் ரயில் நிலையம் வந்தடைகிறது. 8.25 மணிக்கு மதுரை வந்து சேரும்.

திருச்சி வழியாக இந்த ரயில் மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு செங்கல்பட்டு சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். மறுமார்க்கத்தில், இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து நாளைமாலை 3.45 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 11.30 மணிக்கு மதுரைக்கும், நள்ளிரவு 11.53 மணிக்கு திருமங்கலம் ரெயில் நிலையமும் வந்தடையும். நள்ளிரவு 2.45 மணிக்கு நெல்லைக்கு வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில்கள் இருமார்க்கத்திலும், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும். ஒரு 2-அடுக்கு ஏசி பெட்டி, 2 3 அடுக்கு ஏசி கோச்கள் , 10 ஸ்லீப்பர் வசதி பெட்டிகள், 3 முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+