சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டமால் டுமீல்".. சென்னைக்கு லக்.. இதுதான் பெஸ்ட் வருஷம்.. குட்நியூஸ் சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்!

Google Oneindia Tamil News

சென்னை: தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை சென்னைக்கு இது சிறப்பான வருஷம் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை எல்லா வருடமும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி 4 மாதங்களுக்கு செப்டம்பர் வரை பெய்ய கூடிய மழை ஆகும். இந்த வருடம் இடையில் கொஞ்சம் பிரேக் எடுத்த தென்மேற்கு பருவமழை தற்போது மீண்டும் பிச்சு எடுக்க தொடங்கி உள்ளது.

தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று பரவலாக இதனால் மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் இரவு முழுக்க கனமழை பெய்தது. வடமாவட்டங்களில், சென்னையில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு முழுக்க பிரேக் எடுத்து பிரேக் எடுத்து பெய்தது.

தினமும் 1 லட்சம் கொரோனா கேஸ்கள் வரலாம்.. 3ம் அலை இந்தியாவில் எப்படி இருக்கும்? ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!தினமும் 1 லட்சம் கொரோனா கேஸ்கள் வரலாம்.. 3ம் அலை இந்தியாவில் எப்படி இருக்கும்? ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!

சென்னை

சென்னை

தென்மேற்கு பருவமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தொடர்ந்து தனது கணிப்புகளை துல்லியமாக வெளியிட்டு வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் அவர் வெளியிட்ட வானிலை அறிவிப்பிலேயே, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் அடுத்த 3 - 4 நாட்களுக்கு மழை இருக்கும். ஜூலை 19 - 20 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை

மழை

அதேபோல் ஜூலை 20-22ல் ஒடிசா கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு ஏற்படும். இந்த தாழ்வு நிலை உருவாவதற்கு முன்னதாக சென்னையில் டமால் டுமீல் மழையை எதிர்ப்பார்க்க முடியும் என்று குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டது போலவே நேற்றும், நேற்று இரவும் சென்னையில் கனமழை பெய்தது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

தண்ணீர் அளவு

தண்ணீர் அளவு

இதுகுறித்து ட்வீ ட் செய்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், சென்னையில் இரண்டாவது நாளாக நல்ல மழை பெய்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு நல்ல மழை பெய்யும். சென்னை அண்ணா நகர் பகுதியில், 30 நிமிடத்தில் 33 மிமீ மழை பெய்துள்ளது. புழல் பகுதியில் 48 மிமீ மழையும், வில்லிவாக்கம் பகுதியில் 54 மிமீ மழையும் பெய்துள்ளது. "சூப்பர்" தீவிர மழை இரண்டாவது நாளாக பெய்துள்ளது.

இரவு

இரவு

சென்னையில் நேற்று இரவு ஒரு மணி நேரமாக தீவிரமாக மழை பெய்துள்ளது. 60-70 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்க வாய்ப்புள்ளது. சென்னையில் அண்ணா நகர், நுங்கம்பாக்கம் ஆகியவை லக்கியான இடங்கள். இங்கு கடந்த இரண்டு நாட்களாக அதிதீவிரமாக மழை பெய்துள்ளது.

 சென்னை

சென்னை

சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளின் நீர் இருப்பு 7 டிஎம்சியாக ஜூலை மாதம் உள்ளது. இது சென்னையின் பெஸ்ட் வருடங்களில் ஒன்று. வடமேற்கு பருவமழை இனி பொய்த்தால் கூட நாம் அடுத்த வருடம் சமாளித்து விடலாம் என்ற சிறப்பான நிலையே தற்போது உள்ளது. ஜூலை மாதம் பெய்ய கூடிய மழையால் சென்னையின் நிலத்தடி நீர் இருப்பும் உயரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Southwest Monsoon: Chennai sees one of the best years says Tamilnadu weatherman Pradeep John.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X