இனி வெயிலுக்கு குட்பாய்.. அடுத்த 2 நாட்களில் மாறப்போகுது எல்லாமே.. வானிலை மையம் சூப்பர் தகவல்
சென்னை: அடுத்த 2 நாட்களில் அந்தமான் கடற்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் விரைவில் வெயில் விடைபெற போகிறது. மழை காலம் தொடங்க போகிறது. இந்த தகவல் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அக்னி வெயில் படுத்தி எடுத்துவிட்டது. சென்னை, வேலூர், சேலம், திருச்சி, மதுரை, நெல்லை என எல்லா ஊர்களுமே வெயில் மற்றும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மட்டும் அவ்வப்போது மழை பெய்ததால் அந்த பகுதிகள் மட்டும் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது.

இந்நிலையில் வெயிலின் தாக்கம் அடுத்த இரண்டு நாட்களில் குறையப்போவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை இந்தியாவில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் நல்ல தகவலை வெளியிட்டுள்ளது.
அடுத்த 2 நாட்களில் அந்தமான் கடற்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், இந்தியா முழுவதும் நிலவி வந்த வெப்ப அலை ஓய்ந்தது என்றும் இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் 6 மாநிலங்களில் மலைப் பகுதியை ஒட்டிய இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்குகிறது என்றும் கூறியுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஜுன் முதல் வாரத்தில் தொடங்க உள்ள நிலையில், அங்கு தற்போது வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. அதேநேரம் வெப்பச்சலனம் காரணமாக மழைப்பொழிவும் அங்கு சில பகுதிகளில் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications