தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?
சென்னை: தங்கத்தை வெறும் ஆபரணமாக மட்டும் பார்த்துக் கொண்டிருந்த காலம் மாறி, இன்று அது ஒரு மாபெரும் புதையலாக உருவெடுத்துள்ளது. கையில் காசு வைத்திருப்பவர்கள் கடையைத் தேடி ஓடியபோது, அரசாங்கத்திடம் காகிதமாக தங்கத்தை வாங்கியவர்களுக்கு இப்போது அடித்துள்ள அதிர்ஷ்டம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.. அது என்ன தெரியுமா?
மத்திய அரசு ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடும் தங்கப் பத்திரத் திட்டம் என்பது சாதாரண மக்களுக்கான ஒரு வரப்பிரசாதம் ஆகும். இதில் தங்கம் உங்கள் கைக்கு வராது, ஆனால் நீங்கள் கொடுத்த பணத்திற்கு இணையான தங்கத்தின் மதிப்பு ஒரு பத்திரமாக உங்கள் கையில் இருக்கும்.

சவரன் தங்க பத்திர சேமிப்பு திட்டம்
பொதுவாக இந்தத் தங்க பத்திரங்கள் 8 ஆண்டுகள் கழித்துதான் முதிர்வடையும்.. ஆனாலும் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு அதிலிருந்து நாம் வெளியேறும் வசதி உண்டு. அதன்படி இப்போது 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சில குறிப்பிட்ட தங்கப் பத்திரத் தொடர்களுக்கான முன்கூட்டியே வெளியேறும் தேதியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்கத்தின் விலை தற்போது 16,063 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களின் சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டு இந்த விலை முடிவு செய்யப்பட்டுள்ளது..
லட்சங்களில் லாபம்
இந்தத் தகவலை இன்னும் சிம்பிளாக சொல்ல வேண்டுமானால், சில வருடங்களுக்கு முன்பு ஆண்டுகளுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கு இப்போது அது பல மடங்காக பெருகியுள்ளது.
குறிப்பாக 4 வருடங்களுக்கு முன்பு ஒரு கிராம் தங்கம் வெறும் 4,600 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டது. அப்போது ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்த ஒருவருக்கு இன்று அந்தப் பணம் சுமார் 3 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயாகப் பெருகியுள்ளது. அதாவது நீங்கள் போட்ட பணம் நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்குக்கும் மேலாக வளர்ந்து நிற்கிறது. இது மற்ற எந்தச் சேமிப்புத் திட்டத்திலும் கிடைக்காத ஒரு அசாத்தியமான வளர்ச்சியாகும்.
தங்கப் பத்திரம் திட்டம்
குறிப்பாக 2020-21 ஆம் ஆண்டின் 12-வது தொடரில் முதலீடு செய்தவர்களுக்குச் சுமார் 248 சதவீத லாபம் கிடைத்துள்ளது. இது சாதாரண நடுத்தரக் குடும்பத்து மக்களின் கனவுகளை நனவாக்கும் ஒரு மிகப்பெரிய தொகையாகும்..
அதாவது போட்ட பணம் 3 மடங்குக்கும் மேலாக பெருகி அந்த முதலீட்டாளரைக் கோடீஸ்வரர் ஆக்கும் பாதையில் அழைத்து சென்றுள்ளது. இதேபோல் 6வது தொடரில் முதலீடு செய்தவர்களுக்கு சுமார் 217 சதவீத லாபம் கிடைத்துள்ளது.. இந்த லாபம் என்பது வெறும் தங்கத்தின் விலை உயர்வால் கிடைத்தது மட்டுமே ஆகும்.
இந்தத் திட்டத்தில் கூடுதல் இனிப்பாக மத்திய அரசு ஆண்டுதோறும் 2.50 சதவீத வட்டிப் பணத்தையும் உங்கள் வங்கிக் கணக்கிலேயே நேரடியாகச் செலுத்தி விடுகிறது. தங்கத்தின் விலை ஏறுவதால் கிடைக்கும் லாபம் ஒரு பக்கம் இருக்க, இந்த வட்டிப் பணம் என்பது உங்களுக்குக் கிடைக்கும் கூடுதல் போனஸ் ஆகும்.
தங்கத்தில் லாபம்
நகையாக வாங்கினால் செய்கூலி மற்றும் சேதாரம் என்று கணிசமான தொகை வீணாகும். ஆனால் இந்தப் பத்திர முறையில் ஒரு பைசா கூட வீணாகாமல் முழு லாபமும் உங்களுக்கே வந்து சேருகிறது. இப்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள குறிப்பிட்ட தேதிகளில் உங்கள் பத்திரங்களை ஒப்படைத்தால், இன்றைய உச்சகட்ட தங்க விலையின் அடிப்படையில் லாபத்தைப் அள்ளிக்கொள்ளலாம்..
முதலீடு செய்ய நினைக்கும் சாமானிய மக்கள் இனிவரும் காலங்களிலும் இது போன்ற அரசு திட்டங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கத்தை வீட்டில் வைத்துப் பாதுகாக்கும் பயம் கிடையாது, திருட்டுப் போகும் என்ற கவலை கிடையாது. வெறும் காகிதமாக இருந்தாலும் அதன் மதிப்பு இன்று லட்சக்கணக்கில் உயர்ந்துள்ளது பலருக்குப் பாடமாக அமைந்துள்ளது.
பூட்டி வைக்கும் தங்கத்துக்கு லாபம்
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள இந்த புதிய அறிவிப்பின்படி மார்ச் மாதத்தின் குறிப்பிட்ட தேதிகளில் மக்கள் தங்களின் பத்திரங்களை ஒப்படைத்துவிட்டுப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
தங்கத்தை வீட்டில் பூட்டி வைத்துப் பாதுகாக்கும் பயம் இல்லாமல் பத்திரமாகச் சேமித்தவர்களுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாக இதைப் பார்க்க முடிகிறது. சாதாரண மக்களும் பங்குச்சந்தை போன்ற சிக்கலான விஷயங்களுக்குப் போகாமல் தங்கத்தின் மூலமே இவ்வளவு பெரிய லாபத்தைச் சம்பாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு நேரடி உதாரணமாக அமைந்துள்ளது..!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications