பாமக - தவெக கூட்டணி.. அமைச்சர் ஆகப் போகும் சௌமியா அன்புமணி! அவரே சொன்ன பதிலை பாருங்க!
திருவண்ணாமலை: தமிழக வெற்றிக் கழகத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைக்கப் போவதாகவும், பாமக சட்டமன்ற குழு தலைவர் சௌமியா அன்புமணி அமைச்சரவையில் இடம்பெறப் போவதாக கடந்த சில தினங்களாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த நிலையில் பாமக தவிர்க்க கூட்டணி குறித்தும் அமைச்சரவை வாய்ப்பு குறித்தும் பேசியிருக்கிறார் சௌமியா அன்புமணி.
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி அரசியல் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், ஐயூஎம்எல் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளை கழட்டி விட்டு பாமகவை தமிழக வெற்றிக்காக கூட்டணியில் இணைக்க போவதாக கடந்த சில தினங்களாக த்கவல் வெளியாகி வருகிறது.

அது மட்டும் இல்லாமல் பாமக சட்டமன்ற குழு தலைவர் சௌமியா அன்புமணி, அமைச்சரவையில் இடம் பெறப் போவதாகவும் சொல்லப்படுகிறது இந்த விவாதங்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் விளக்கம் அளித்திருக்கிறார் சௌமியா அன்புமணி.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," திருவண்ணாமலை ஆன்மிக நகரில் கிரிவலப் பாதையில் கார்த்திகை தீபத்திற்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக வரும் என்பதால் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கிரிவலப் பாதையில் அத்தியந்தல், அடி அண்ணாமலை பகுதியில் சுகாதார நவீன பொது கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இன்று அது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சட்டமன்றத்தில் குரல் கொடுக்கப்பட்டுள்ளது. பழைய திட்டங்களில் நீக்க வேண்டியவை குறித்து அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். புதிதாக நீர் பாசன திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காக விரிவான திட்ட அறிக்கைகள் ஒரு சில திட்டங்களுக்கு பெறப்பட்டுள்ளது.
அந்த திட்டங்கள் நிலுவையில் இருப்பதாக சட்டமன்றத்தில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அனைத்து ஏரிகள் மற்றும் குளங்கள் டேம் தூர்வார வேண்டும் என்பதுதான் பாமகவின் நீண்ட நாள் கோரிக்கை. ஆற்றுப் படுகைகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறோம்.
இடைத்தேர்தலுக்கு பிறகு பாமக தமிழக வெற்றி கழகத்தோடு இணைய வாய்ப்பு இருக்கிறதா என கேட்கிறார்கள். அது ஒரு வதந்தி.. அந்த வதந்தி தான் அனைவராலும் பேசப்படுகிறது. ஆனால் அது உண்மை இல்லை. தமிழக வெற்றி கழக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க.. குறிப்பாக மகளிர் தின சிங்கப்படை என்ற ஒரு தனி படையை உருவாக்கி இருக்கிறது.
காவல்துறையில் உள்ள பற்றாக்குறை சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி தமிழக வெற்றி கழகம் அதனை செய்தால் கண்டிப்பாக சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டுவரப்படும். சட்டம் ஒழுங்கு பலவீனம் அடைத்ததற்கு காரணம் காவல்துறையில் ஏற்பட்டுள்ள ஆட்கள் பற்றாக்குறையை சரி செய்யாதது தான். ஊர்க்காவல் படையில் அதிக அளவில் பணியாற்றுகிறார்கள் அவர்களை முழுமையாக பயன்படுத்தினால் சட்டம் ஒழுங்கு சிறப்பான இடத்திற்கு காவல்துறையை கொண்டு செல்ல முடியும்.
பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து மதுவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அனைத்துக் கட்சிகளும் மதுவை படிப்படியாக ஒழிக்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டுள்ளார்கள். தற்போதைய தமிழக வெற்றி கழக அரசு தேர்தல் அறிக்கையில் மது ஒழிப்பை அறிவித்திருக்கிறார்கள். மது ஒழிப்புக்கு எதிராக தொடர்ந்து பாமக குரல் கொடுக்கும்" என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
