எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்.. வென்டிலேட்டர், எக்மோ சிகிச்சை அளிப்பு- மருத்துவமனை
சென்னை: கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இன்னும் ஐசியு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Recommended Video
அவருக்கு வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் எம்ஜிஎம் மருத்துவமனை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை, ஏற்றத்தாழ்வுடன் தொடர்ந்து காணப்படுகிறது.

வாழ்த்துக்கள்
ஒருநாள் பரவாயில்லை என்றும் மற்றொரு நாள் மோசமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியாகியபடி உள்ளளது.
பல்வேறு பிரபலங்களும் எஸ்பி பாலசுப்பிரமணியம் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவ அறிக்கை
இந்த நிலையில்தான் இன்று மாலை எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்மோ சிகிச்சை
அந்த செய்தி குறிப்பு மேலும் கூறுகையில், கொரோனா பாதிப்பால், எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு வென்டிலேட்டர் மூலமாகவும், எக்மோ சிகிச்சையும் வழங்கப்பட்டு தொடர்ந்து ஐசியூவில் சிகிச்சை பெறுகிறார்.

ஐசியூ சிகிச்சை
மருத்துவ நிபுணர் குழு தொடர்ந்து அவரது உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து சிகிச்சை அளித்து வருகிறது. அடிப்படையான மருத்துவ நிலைமையில் சரிவு இன்றி இப்போதைக்கு சீராக உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். பிரார்த்தனைகள் செய்து வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications