"சின்னம்மா + டிடிவி தினகரன்.. அதிமுகவை முழுமையாக ஒருங்கிணைக்கணும்!" எஸ்பி வேலுமணி சொன்ன வார்த்தை!
சென்னை: எஸ்பி வேலுமணி- சிவி சண்முகம் தரப்பினர் அதிமுகவை உடைக்க பார்ப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டிய நிலையில், இது தொடர்பாக எஸ்பி வேலுமணி- சிவி சண்முகம் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. அதிமுகவை உடைக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனக் கூறியுள்ள எஸ்பி வேலுமணி, பிரிந்து சென்ற சசிகலா மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோரை கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதிமுகவில் இப்போது மீண்டும் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு அணி மற்றும் எஸ்பி வேலுமணி- சிவி சண்முகம் தரப்பில் ஒரு அணி என இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட விஜய் அரசுக்கு எதிராக எடப்பாடி தரப்பு 22 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். அதேநேரம் ஆதரவாக எஸ்பி வேலுமணி- சிவி சண்முகம் தரப்பில் 25 பேர் வாக்களித்தனர்.

இதனால் அதிமுகவில் மோதல் இருப்பது உறுதியானது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி சில அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அமைச்சர் பதவிக்காகச் சிலர் பிரிந்து செல்வதாகக் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதற்கிடையே எடப்பாடிக்கு பதிலடி தரும் வகையில் எஸ்பி வேலுமணி- சிவி சண்முகம் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. அதிமுகவை உடைக்கும் எண்ணம் இல்லை; அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று எஸ்பி வேலுமணி தெரிவித்தார்.
மேலும் அவர், "அதிமுக தான் எங்களுக்கு எல்லாம்; அந்த இயக்கத்தைக் காப்பாற்றவே இதைச் செய்கிறோம்.. தோல்வியை ஆய்வு செய்ய வேண்டும் என்றே நான் சொன்னேன்.. எல்லாரையும் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து வெளியே அனுப்பி வருகிறார்.. பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் இணைக்க வேண்டும்" என்றார்.
குறிப்பாக சசிகலா பற்றி பேசும்போது அவர் சின்னம்மா என்றே குறிப்பிட்டுப் பேசினார். ஓபிஎஸ், செங்கோட்டையன் எனப் பலரும் புரிந்து செல்ல எடப்பாடி தான் காரணம் என்றும் அனைவரையும் கட்சியில் இணைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications