எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு.. விளக்க மனு தாக்கல் செய்த புலனாய்வு அதிகாரிகள்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகள் விளக்க மனு தாக்கல் செய்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு மத்திய அரசின் அனுமதி பெற தாமதம் ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு இன்று விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தபோது சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக ஊழல் தடுப்புத் துறையிடம் அறப்போர் இயக்கம் புகார் அளித்தது.

இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஐஏஎஸ் அதிகாரிகள், தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் என பலர் மீது ஊழல் தடுப்புத் துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றப்பத்திரிகையும் தயார் செய்தனர். ஆனால், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை நீதிமன்றத்தில் விசாரிப்பதற்காக மத்திய அரசிடம் அனுமதி ஒப்புதல் பெறவில்லை.
இதனிடையே ஊழல் தடுப்புத் துறை காவல் கண்காணிப்பாளர் விமலாவுக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு மத்திய அரசின் அனுமதி பெற 19 மாதங்கள் தாமதம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து ஊழல் தடுப்புத் துறை போலீசார் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது ஊழல் தடுப்புத் துறை தரப்பில், இந்த வழக்கில் மூன்று பேர் புலன் விசாரணை அதிகாரிகளாக இருந்துள்ளனர்.
அவர்கள் மூன்று பேரும் தனித்தனியாக பதிலளிக்க வேண்டியுள்ளது.
எனவே, பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை
வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை இன்றைய தேதிக்கு
ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புலன் விசாரணை அதிகாரிகள் விளக்க மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த மனுக்களுக்கு அறப்போர் இயக்கம் பதில் அளிக்க உத்தரவிட்டு டிசம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்.
-
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை? அவசர முறையீட்டில் ஐகோர்ட் தலைமை நீதிபதி கேட்ட கேள்வி! -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா!












Click it and Unblock the Notifications