Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பச்சை துரோகம்".. ஊழலோ ஊழல்.. யார் இந்த நந்தகுமார்?.. வேலுமணியின் உறவினராமே.. பரபரக்கும் ரெய்டு

எஸ்பி வேலுமணியின் உறவினர் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமாரின் அடையாறு வீட்டிலும் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக வட்டாரமே கலங்கி போயுள்ளது...!

Recommended Video

    லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுக்கு எதிர்ப்பு: எஸ் பி வேலுமணி வீடு முன்பு அதிமுகவினர் வாக்குவாதம்!

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கோவையில் மாஜி அமைச்சர் வேலுமணிக்கு தொடர்புடைய 35 இடங்கள், சென்னையில் 15 இடங்கள் மற்றும் திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா 1 இடம் உட்பட மொத்தம் 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.. அமைச்சருடன் சேர்ந்து ஒரு அதிகாரி வீட்டில் ரெய்டு நடக்கிறது என்றால், அந்த அதிகாரி யார்? இவருக்கு அப்படி என்ன முக்கியத்துவம்? யார் இந்த நந்தக்குமார்? என்ற பல சந்தேகங்கள் எழுகின்றன.

     முறைகேடு

    முறைகேடு

    டெண்டர் முறைகேடுகளில் வேலுமணிக்கு உதவியதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடக்கிறது என்றாலும், நந்தகுமார் ஒரு வகையில் வேலுமணிக்கு உறவினர் என்கிறார்கள்.. திமுகவில் கட்டிட தொழிலாளர் சங்க தலைவராக இருந்த பொன்.குமாரின் மச்சினரும்கூட..!

     கோரிக்கை

    கோரிக்கை


    சில தினங்களுக்கு முன்பு கூட, சென்னை மாநகராட்சி சிவில் என்ஜினியர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் ஒரு கோரிக்கையை வைத்திருந்தனர். அதில், அதிகாரத்தை மீறி பதவி உயர்வு பெற்று பல நூறு கோடிகளை ஊழல் மூலம் சேர்த்த சென்னை பெருநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

     உதவி பொறியாளர்

    உதவி பொறியாளர்

    இதனிடையே நந்தகுமார் குறித்த சில உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் கசிந்தபடியே வெளிவருகின்றன.. 1993-ல் சென்னை டிப்போவில் லாரி ரிப்பேர் பார்க்கும் உதவி பொறியாளராக வேலையில் சேர்ந்தவர் நந்தகுமார்.. லாரிகளை மட்டுமே கவனிப்பதுதான் இவரது முக்கிய வேலையாம்.. பிறகு தான் அதிகார மையத்தின் உதவியுடன் அடுத்தடுத்த போஸ்டிங்கில் மேலே வந்துள்ளார்.. அதாவது சென்னை பெருநகராட்சியின் மழைநீர் வடிகால், பேருந்து சாலைகள், சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட துறைகளின் தலைமை பொறியாளர் நந்தகுமார், பொதுப்பிரிவில் தலைமை பொறியாளராக நியமிக்கப்பட்டார்...

    பொறியாளர்

    பொறியாளர்

    இதில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பேருந்து சாலை பிரிவில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றியபோது, 200 கோடி ரூபாய் ஊழலில் நந்தகுமார் சிக்கினாராம்.. அதற்கு பிறகுதான் மழைநீர் வடிகால் பிரிவின் சிறிப்பு திட்டத்திற்கு மாறி வந்துள்ளார்.. சென்னை நகரத்துக்கு தனியாக மழைநீர் வடிகால் அமைக்க, ரூ.1720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதிலும் நந்தகுமார் கைங்கரியத்தை காட்டி உள்ளார்.. இந்த டெண்டர் தற்போது ரத்து செய்யப்பட்டு விட்டாலும், எந்த துறையில் ஊழல் செய்ய முடியுமோ அங்கே ஜம்ப் ஆகிவிடுவாராம் இந்த நந்தகுமார்..

     ஊழல்கள்

    ஊழல்கள்

    எனினும் தொடர்ந்து மழைநீர் வடிகால், பேருந்து சாலை, சிறப்பு திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி பயிற்சி அனைத்து மண்டலங்களின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட துறைகளையும் கவனித்து வந்திருக்கிறார்.. அப்போதுதான் அவர் பல நூறு கோடிகள் ஊழல் செய்ததாககூறி, அறப்போர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையிடம் புகார்கள் வழங்கின.. அதுமட்டுமல்ல, நந்தகுமாரை தலைமை பொறியாளராக மாற்றியதால் நிறைய வங்கிகளிடமிருந்து கடனாக 25000 கோடி பெற்று தந்து, அதிலும் வேலுமணி & கோ கமிஷன் அடித்துள்ளதாகவும் அந்த புகாரில் விலாவரியாக கூறியிருந்தனர்.

    மாநகராட்சி

    மாநகராட்சி

    இப்படிப்பட்ட சூழலில்தான், சென்னை மாநகராட்சியில் ரூ 1500 கோடி ஊழல் செய்திருப்பதாக ஆணையராக இருந்த பிரகாஷ் ஐஏஎஸ்ஸை டிரான்ஸ்பர் செய்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி சுகன் தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டார். இது நந்தகுமார் தரப்புக்கு லேசான கலக்கத்தை தந்திருப்பதாகவே தெரிகிறது.. திமுக ஆட்சி அமைந்து விட்டதால் மாநகராட்சியின் மழைநீர் வடிகால் பணியில் நடந்த பலகோடி ஊழலால் சஸ்பெண்ட் செய்ய வாய்ப்புள்ளது என்பதையும் நன்றாக அறிந்திருந்தார்..

    நடவடிக்கை

    நடவடிக்கை

    அதனால்தான், திமுகவுக்கும் தூது நடவடிக்கையை கையில் எடுத்தார்.. அது எதுவும் வேலைக்கு ஆகவில்லை.. இது நந்தகுமாருக்கு கொஞ்சம் ஷாக்தான்.. எப்படியாவது அதிமுகதான் ஆட்சிக்கு வந்துவிடும் என்ற அளவுக்கு அதிகமான நம்பிக்கையில் ஊழல் செய்தார்.. ஒருகட்டத்தில் தன்னை காப்பாற்றி கொள்ள, இவ்வளவு நாள் தனக்கு ஆதரவாக இருந்த வேலுமணிக்கு துரோகம் செய்யவும் துணிந்தாராம் நந்தகுமார்..

    அப்ரூவர்

    அப்ரூவர்

    அதனால்தான் வேலுமணிக்கு எதிராக அப்ரூவராக மாற தயாராக இருக்கிறார் என்றும்கூட செய்திகள் கசிந்தன.. ஆனால், திமுகவின் கிடுக்கிப்பிடியினால், நந்தகுமாரின் அனைத்து முயற்சியிலும் தோல்வி அடைந்துள்ளதாகவே தெரிகிறது.. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று உறுதியாக தெரியாவிட்டாலும், ஊழல் புகார் வலுவாக உள்ளதன் அடிப்படையில், இன்று வசமாக மாட்டி கொண்டுள்ளார் நந்தகுமார்..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+