"அந்தரத்தில் மிதந்த 2200 ரயில்கள்".. வானத்தில் தோன்றிய நீண்ட ஒளி! "இது" என்னன்னு தெரிஞ்சா ஆடிடுவீங்க
சென்னை: வானத்தில் நீண்ட ரயில் செல்வது போன்ற காட்சிகள் உலகம் முழுக்க பல நாடுகளில் தோன்ற தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க பல நாடுகளில் இப்படி வானத்தில் தோன்றும் நீண்ட ஒளிகள் மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அது என்ன ஒளி? வாருங்கள் பார்க்கலாம்!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் உலகம் முழுக்க அனைத்து நாடுகளுக்கும் இணையம் வழங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். நாம் இதுவரை இணையத்தை ஃபைபர் வயர்கள் மூலமே பெற்று வருகிறோம்.
இதற்காக கடலுக்கு அடியில் அதிக அளவில் வயர்கள் போடப்பட்டு உள்ளன. பிராட் பேண்ட் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது. டவர்கள் மூலம் போன்களுக்கு வழங்கப்படுகிறது.
இதற்கு பதிலாக நேரடியாக விண்வெளியில் இருந்து சாட்டிலைட் வழியாக இணையத்தை வழங்க மஸ்க் முடிவு செய்துள்ளார்.

இணையம்
இதன் மூலம் உலகின் எந்த மூலைக்கும் இணையத்தை எளிதாக வழங்க முடியும். இதன் பெயர் ஸ்டார் லிங்க் திட்டம். எலான் மஸ்க் தனது ஸ்டார் லிங்க் திட்டத்திற்காக கடந்த 2 வருடமாக 2200 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி உள்ளார். உலகிலேயே ஒரு திட்டத்திற்காக அதிகம் அனுப்பப்பட்ட செயற்கைகோள்கள் இதுதான். இந்த ஸ்டார் லிங்க் என்பது நமக்கு இணையம் வழங்க போகும் புதிய திட்டம் ஆகும். டிஷ் போல நேரடியாக வீட்டில் டிஷ் வைத்து இணையத்தை சாட்டிலைட் மூலம் பெறும் வசதி ஆகும் இது. ஸ்டார் லிங்க் பயனாளிகள் வீட்டில் டிஷ் வைத்து இணையத்தை பெற முடியும்.

டிவி
அதாவது டிவி பார்ப்பது போலவே ஸ்டார்லிங்க் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி நாம் இணையத்தை பிற முடியும். இதற்காக பூமியை சுற்றி பல ஆயிரம் சாட்டிலைட்டுகளை பறக்க விட மஸ்க் முடிவு செய்துள்ளார். இதற்காக 2020ல் இருந்தே மஸ்க் சாட்டிலைட்களை அனுப்பி.வருகிறார் 50, 60 என்று ஒவ்வொரு முறையும் சாட்டிலைட்டுகளை அனுப்பி உள்ளார். இவை எல்லாம் ஒரு நேர் கோட்டில், வட்டமாக பூமியை சுற்றி வரும். இதுவரை 13 முறைக்கும் மேல் இந்த சாட்டிலைட்டுகள் அனுப்பப்பட்டு உள்ளன.

எத்தனை
இதுவரை 2200 சாட்டிலைட்டுகள் அனுப்பப்பட்டு உள்ளன. மொத்தமாக 12,000 சாட்டிலைட்டுகளை பறக்க விட மஸ்க் திட்டமிட்டு உள்ளார். எதிர்காலத்தில் இதை 42,000 ஆக உயர்த்த அவர் திட்டமிட்டு இருக்கிறார். இரவு நேரத்தில் இது வானத்தில் நேர் கோட்டில் செல்லும் காட்சி பார்க்கவே வியப்பாக இருக்கும். இரவு நேரத்தில் இந்த சாட்டிலைட்டுகள் வானத்தில் வரிசையாக செல்வதை பார்த்தால் அதை பலரும் வானத்தில் என்ன ரயில் போகிற மாதிரி இருக்கிறது என்று வியந்து போகிறார்கள். பார்க்க ரயில் வானத்தில் செல்வது போலவே இருக்கும்.

தெரியும்
உலகில் பல நாடுகளில் இந்த சாட்டிலைட் தெரிகிறது. இதை சிலர் தவறுதலாக என்ன ஏலியன் வந்துவிட்டதா என்றும் சந்தேகத்தோடு கேட்கிறார்கள். இந்தியாவிலும் கூட இதை நாம் பார்க்க முடியும். உதாரணமாக சென்னையில் இன்று அதிகாலை 4.58 மணிக்கு தெரிந்தது. வானத்தில் வடக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிக்கு இடையில் ஸ்டார்லிங்க் தெரிந்தது. மீண்டும் 17ம் தேதி காலை 5.18 மணி அளவில் அதே ஸ்டார்லிங்க் சென்னையில் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications