எஸ் பி பாலசுப்ரமணியம் சுயநினைவுடன் இருக்கிறார், சொல்வதை புரிந்து கொள்கிறார்.. மருத்துவமனை
சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், அவர் சுயநினைவுடன் உள்ளதாகவும், அவர் அனுமதிக்கப்பட்டுள்ள எம்ஜிஎம் மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் படிப்படியாக அவரது உடல் நிலை தேறி வருவதாக அவ்வபபோது எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இதேபோல் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரணும் தனது தந்தையின் உடல் நிலை குறித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் எம்ஜிஎம் மருத்துவமனை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை தொடர்கிறது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. எஸ்பி பாலசுப்பிரமணியம் சுயநினைவுடனும், சொல்வதை புரிந்துகொள்ளும் வகையிலும் உள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவக்குழு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ் பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரணும் தன்னுடைய இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தந்தையின் உடல் நிலைகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications