SPB Birthday: எஸ்பிபி பிறந்தநாள் இன்று.. ரசிகர்கள் நினைவிடத்திற்கு வரவேண்டாம் என சரண் கோரிக்கை!
சென்னை: மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பிறந்த நாளான இன்று, அவரது நினைவிடத்துக்கு ரசிகர்கள் வர வேண்டாம் என்று அவரது மகன் எஸ்பிபி சரண் கேட்டுக் கொண்டுள்ளார்.
தாமரைப்பாக்கத்தில் அமைந்துள்ள எஸ்பிபி நினைவிடத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால் ரசிகர்களின் பாதுகாப்பு கருதி அனுமதி இல்லை என எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களை சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் தன்னுடைய குரலால் கட்டிப்போட்டு வைத்தவர் எஸ்பி.பாலசுப்பிரமணியம். அவரது 79வது பிறந்தநாள் இன்று. பாடகர் மட்டுமல்லாது நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்திறமையாளராக வலம் வந்தார் எஸ்பிபி.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் விஸ்வநாதன் இசையில் பாட ஆரம்பித்த எஸ்பிபி, ஜிவி பிரகாஷ், அனிருத் வரை அனைவரது இசையிலும் பாடல்கள் பாடி இருக்கிறார். இளையராஜா, தேவா, வித்யாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, அனிருத் என கிட்டத்தட்ட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிய ஒரே பாடகர் என்ற பெருமை பெற்றவர் எஸ்பிபி.
ஆறு முறை தேசிய விருது, நான்கு முறை பிலிம்பேர் விருது, 25 முறை ஆந்திர அரசின் நந்தி விருது மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருது ஆகியவற்றையும், கோடிக்கணக்கான ரசிகர்களின் அபிமானத்தையும் பெற்றவர் எஸ்பி பாலசுப்ரமணியம்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி என பல்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றார் எஸ்பிபி.
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 2020 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் தற்போது நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பிறந்த நாளான இன்று, அவரது நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ரசிகர்கள் வரவேண்டாம் என்று அவரது மகன் எஸ்பிபி சரண் கேட்டுக் கொண்டுள்ளார். கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் பாதுகாப்பு கருதி ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications