Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் வைத்த கோரிக்கை.. முடிவை உடனே மாற்றிய சபாநாயகர்.. சபைக்கு வர அதிமுக எம்எல்ஏக்களுக்கு அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சபைக்கு வர அனுமதி இல்லை என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்ததனால் மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வர அனுமதி கொடுத்து சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம் செய்யப்பட்ட பிறகு கேள்வி நேரம் நடந்துகொண்டிருந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலின் சபாநாயகர் அப்பாவுவிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அதில் ஸ்டாலின் கூறியதாவது:-

assembly kallakurichi liquor death tamil nadu AIADMK Tamil Nadu Assembly session Edappadi Palaniswami

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். டிசம்பர் 2001-ல் இதுபோன்று ஒரு நிகழ்வு கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் நடைபெற்று, 52 நபர்கள் மரணமுற்று, 200-க்கும் மேற்பட்டோர் மிகுந்த பாதிப்புக்குள்ளானார்கள். அப்போது உரிய நடவடிக்கை சரிவர எடுக்கப்படவில்லை என்று எல்லோரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

திட்டமிட்டு நாடகம்: நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் திரு. ஜி.கே. மணி அவர்களும், நம்முடைய திரு. தி.வேல்முருகன் அவர்களும் அவையிலேயே இதுகுறித்து மார்ச் 2002 ஆம் ஆண்டு உரையாற்றியிருக்கிறார்கள். தற்போது இந்தச் சம்பவம் குறித்து என்னுடைய கவனத்திற்கு வந்தவுடனேயே நான் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அதுகுறித்து நான் அனைத்து உறுப்பினர்களும் பேசிய பின்னர் விரிவாகப் பதில் வழங்குகிறேன்.

அப்போது சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை; தற்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள காரணத்தால், இப்போது பேசுகிற உறுப்பினர்கள் அந்த நிகழ்வு குறித்து பேசுவார்களோ என பயந்துதான் இவர்கள் இன்றைக்குத் திட்டமிட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு, விதிகளுக்குப் புறம்பாக நடந்துகொண்டு, மரபுகளுக்கு மாறாக குழப்பம் விளைவிக்க முயன்று வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

ஸ்டாலின் விளக்கம்: ஜனநாயக முறையில் இந்த மாமன்றம் நடைபெறவேண்டும் என்பதில், தலைவர் கலைஞர் அவர்களும், நானும் அசையாத கொள்கை உறுதி கொண்டவர்கள். (மேசையைத் தட்டும் ஒலி) மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திலே பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பதில் கொள்கை உறுதி கொண்டவன் இந்த முதலமைச்சர். (மேசையைத் தட்டும் ஒலி) தாங்களும் பல கோரிக்கைகள் வைத்து, மாண்புமிகு பேரவை முன்னவர் அவர்களும் பேசுவதற்கு வாய்ப்பு தரலாம் என பரிந்துரை செய்தும் முதலமைச்சராக, அமைச்சர்களாக இருந்தவர்கள் இங்கே நடந்துகொண்ட முறை தவிர்த்திருக்கப்பட வேண்டியதுதான்.

சபாநாயகருக்கு கோரிக்கை: பேரவை விதி 120-ன்கீழ் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. எனினும் என்னுடைய வேண்டுகோளாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இன்றைக்குக் காலையிலும், மாலையிலும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில், வெளியேற்றப்பட்டவர்கள் இந்த அவைக்கு வினாக்கள் விடைகள் நேரம் முடிந்த பின்னரே அனுமதிக்கப் பெறலாம் என்னும் வேண்டுகோளையும், பிரதான எதிர்க்கட்சி தன்னுடைய கருத்தினைப் பதிவு செய்ய வாய்ப்பு தர வேண்டும் என்றும், இதனை தாங்கள் பரிசீலித்து ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டு அமைகிறேன். என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சபாநாயகர் உத்தரவு: இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதன் பேரில் சபாநாயகர் அப்பாவு, அதிமுக எம்எல்ஏக்கள் இன்று அவையில் கலந்துகொள்ளலாம் என்று கூறினார். முன்னதாக அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஒருநாள் அவையில் கலந்துகொள்ள அனுமதி இல்லை என்ற உத்தரவை திரும்ப பெறுகிறேன்.

அதிமுக எம்எல்ஏக்கள் இன்று அவையில் கலந்துகொள்ளலாம் என்று அறிவித்தார். முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதன் பேரில் சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார். எனினும், சட்டப்பேரவையில் நடவடிக்கையில் பங்கேற்க சபாநாயகர் அழைப்பு விடுத்த போதும், இதனை ஏற்க அதிமுக எம்எல்ஏக்கள் மறுத்துவிட்டனர்.

சட்டசபை கூட்டம்: தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியது. இதில் அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்ததில் 48 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஆளும் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அதிமுக தெரிவித்தது.

ஆனால் அவை தொடங்கியதும் இந்த விவகாரம் குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் விவாதம் நடத்த கோரி சபாநாயகர் அப்பாவுவிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை கேள்வி நேரம் என்றும், கேள்வி நேரம் முடிந்த பிறகு விவாதம் நடத்தப்படும் என்றும் கூறினார்.

பதாகைகள் ஏந்தி தர்ணா: ஆனால் அதிமுக மற்றும் பாஜக, பாமக எம்எல்ஏக்கள் கள்ளச்சாராய சம்பவம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மேலும் சில அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று கூறி பதாகைகளை ஏந்தி தர்ணா செய்தனர். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர் பி உதயகுமாரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். மேலும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். அப்போது கூறிய அப்பாவு, "விவாதம் நடத்த அனுமதியில்லை என்று ஒருபோதும் கூறவில்லை. கேள்வி நேரம் முடிந்த பின்னர் கள்ளக்குறிச்சி விஷ சாரயாம் சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்தப்படும் என்று தான் கூறினோம்.

அதிமுகவினர் வெளியேற்றம்: ஆனால் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் தான் சட்டசபை மான்பு குலைந்துவிடும் என்பதற்காக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இன்று ஒருநாள் அதிமுகவின் அவையில் பங்கேற்க அனுமதி இல்லை" என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி, சட்டசபையில் கள்ளச்சாராய விவகாரம் குறித்து பேச அனுமதி கொடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து பேச வேண்டி அனுமதி கேட்டு தொடர்ந்து குரல் கொடுத்ததால் எங்களை வெளியேற்றியுள்ளனர். மக்களின் பிரச்சினையை பேசவிடாமல் எங்களை ஒடுக்க நினைக்கும் போக்கு கண்டத்துக்குரியது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+