செல்லாது செல்லாது.. அமைச்சரே உட்காருங்க! அப்ளாஸ் அள்ளும் சபாநாயகர் JCD பிரபாகர்.. ரொம்ப ஸ்ட்ரிக்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தமிழக சட்டசபை சென்று கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் என அனைவரையும் தாண்டி அப்ளாஸை அள்ளி வருகிறார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர். அமைச்சர்களாக இருந்தாலும் தவறு என்றால் தவறுதான் என சுட்டிக்காட்டும் அவர், அந்த பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்குகிறேன் என அதிரடியாக பேசி வருவது சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்றுள்ளது. ஏன் எதிர்க்கட்சிகள் கூட சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை கொண்டாடி வருகின்றனர்.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஆட்சியைப் பிடித்தவுடன் நடந்த முதல் சட்டசபை கூட்டத்தில் எம்எல்ஏக்கள் பதவியேற்று கொண்டனர். அப்போது தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா நியமிக்கப்பட்டார்.

JCD Prabhakar

இந்நிலையில், சட்டசபையில் சபாநாயகராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. சட்டமன்றத்தில் நீண்டகால அனுபவம் கொண்டவர்களில் தமிழக வெற்றிக் கழகத்தில் இருப்பவர்களில் இருவர் மட்டும் தான் இருந்தனர்.

தமிழக சட்டசபை

அவர்களில் ஒருவர் தான் செங்கோட்டையன். அதே நேரத்தில் பல ஆண்டு காலம் அதிமுகவில் அமைச்சராக இருந்ததால் அவர் அமைச்சர் பதவிக்கு தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அடுத்த யார் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி அனைவராலும் முன்வைக்கப்பட்டது. சீனியர்கள் இல்லாத சபையில் நீண்ட நெடிய சட்டசபை அனுபவம் கொண்டவர் என்ற அடிப்படையில் திடீரென ஜேசிடி பிரபாகரின் பெயர் முன்வைக்கப்பட்டது.

சபாநாயகர்

அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் மட்டுமல்ல எம்ஜிஆர் காலத்திலேயே இணைந்து பணியாற்றியவர் ஜேசிடி பிரபாகர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர்தான்ஜேசிடி பிரபாகர். எனக்கு ஒரு மகள் இருந்தால் நான் ஜேசிடி பிரபாகருக்கு தான் கொடுப்பேன் என எம்.ஜி.ஆர் பேசியது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அதிமுகவினர் அவரை மருமகன் என்றே அழைத்து வந்தனர்.

ஜேசிடி பிரபாகர்

அதே நேரத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி அணியில் இருந்தாலும் பிறகு ஓபிஎஸ் உடன் பயணித்தார். அதற்குப் பிறகு அரசியலை விட்டு சற்று காலம் ஒதுங்கி இருந்த அவர் தனது மகன் மூலம் தான் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகனுக்கு சீட்டு கேட்டு விஜய்யை சந்திக்க சென்றவரை நீங்களே நில்லுங்கள் உங்களை சபாநாயகர் ஆக்குகிறேன் என்றாராம் விஜய். சொன்னது போலவே தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்ததும் சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

அதிமுக - திமுக

தமிழக சட்டசபை வரலாற்றில் அதிக காலம் ஆட்சி இருந்த கட்சி என்ற நிலையில் இருந்த அதிமுக, எதிர்க்கட்சியாகவும் ஆளுங்கட்சியாகவும் பலமாக செயல்பட்டு வரும் திமுக, புதியவர்கள் மட்டுமே நிறைந்த தமிழக வெற்றி கழகம், பல ஆண்டுகளுக்கு பின் கூட்டணி அமைச்சரவையில் பங்கேற்றிருக்கும் காங்கிரஸ் என பல்வேறு சவால்கள் நெருக்கடிகள் இருக்கும் நிலையில் அவையை எப்படி நடத்தப் போகிறார் ஜேசிடி பிரபாகர் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.

ஆளும் கட்சி

ஆனால் கடந்த காலங்களில் இருந்த சபாநாயகர்களை விட ஒரு படி மேலே இருக்கிறார் ஜேசிடி பிரபாகர் என புகழாரம் சூட்டி வருகின்றனர் நெட்டிசன்கள். சொல்லப்போனால் அதிமுக, திமுக என எதிர்க் கட்சிகளெ அவரைக் கொண்டாடி வருகின்றனர். வழக்கமாக சபாநாயகர் என்றால் ஆளும் கட்சியின் துதி பாடுபவர்கள் தான் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது வழக்கம்தான்.

அப்பாவு

அதிமுக ஆட்சியில் இந்த குற்றச்சாட்டு லேசாக முன்வைக்கப்பட்டாலும் கடந்த ஆட்சிக்காலத்தில் சபாநாயகராக இருந்த அப்பாவு மீது இந்த விமர்சனம் அதிகமாக முன்வைக்கப்பட்டது. ஆளுங்கட்சினர் மட்டும் பேச அனுமதிப்பது, எதிர்க்கட்சிகள் எழுந்தாலே குறுக்கிடுவது, அமைச்சர்களுக்கு பதில் அவரே பதில் சொல்வது என அப்பாவு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதனால் ஜேசிடி பிரபாகர் ஆளும் கட்சியின் புகழ்பாடும் அவையாகத் நடத்தப் போகிறார் என எதிர்பார்த்த அரசியல் பார்வையாளர்களுக்கு ஆச்சரியம் தான் மிஞ்சியது.

அமைச்சர்களிடம் கண்டிப்பு

அவை கூடியதும் திருக்குறளுடன் தொடங்கி எவ்வாறு கட்டுக்கோப்பாக நடத்துவது என்பதை நேரலையில் மக்களுக்கு எளிதாக விளக்குகிறார். உதாரணத்திற்கு கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாகத்தான் பேச வேண்டும், முதலமைச்சராகவே இருந்தாலும் அவர் புகழ் பாடக்கூடாது என ஆளுங்கட்சியினரை கண்டிப்பதில் தொடங்கி, எதிர்க்கட்சியினருக்கு பேச வாய்ப்பளிப்பது, அமைச்சர்கள் தவறான தகவலை சொன்னால் உடனே அதனை அனுமதிக்க முடியாது.. அவை குறிப்பில் இருந்து நீக்குகிறேன் என பேசுவது, குறிப்பாக முதலமைச்சரின் புகழ் பாடாதது என அவையை முற்றிலும் வித்தியாசமாக நடத்தி வருகிறார் என்கின்றனர்.

ஆளுங்கட்சி அமைச்சர்கள்

உண்மையை சொல்லப்போனால் ஜேசிடி பிரபாகரின் நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்பட்டது ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் என்றே சொல்லலாம். உதாரணத்திற்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஒரு புகைப்படத்தை எடுத்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காட்டியபோது தேவையில்லாமல் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது என அவரை கண்டித்ததோடு அவை குறிப்பில் இருந்து நீக்குவதாகவும் அறிவித்தார்.

சிடிஆர் நிர்மல்குமார்

இதேபோல அமைச்சர்கள் சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன், ரமேஷ், விக்னேஷ், பேசியபோதும் அவர்களது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அமர வைத்ததைக் குறிப்பிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் முதலமைச்சரின் புகழ் பாடத் தொடங்கிய பல எம்எல்ஏக்களை உடனடியாக இடைநிறுத்தி புகழ் பாட தேவையில்லை.. நேரடியாக விஷயத்துக்கு வாருங்கள் என அறிவுறுத்துவது பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது.

எம்எல்ஏக்கள்

சமீபத்தில் கூட முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பெயரை கருணாநிதி என விழித்த எம்எல்ஏவுக்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர் அவ்வாறு பேசக்கூடாது என கூறினார். பிறகு முதலமைச்சர் விஜய்யே மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது. அமைச்சர்கள் உட்பட ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர் புதியவர்கள் என்பதால் அவர்கள் அவையில் அனுபவம் பெறுவதற்கு சபாநாயகரின் கண்டிப்பு அவசியம் என கருதுகிறார் விஜய் என தமிழக வெற்றிக்கழகத்தினர் கூறி வருகின்றனர்.

முதல்வர் விஜய்

சொல்லப்போனால் இன்னும் பல சம்பவங்களை சபாநாயகர் செய்திருக்கிறார். இதனால் தமிழக வெற்றிக் கழகத்தினர் விஜயிடம் புகார் தெரிவித்ததாகவும், ஆனால் அவையில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.. சபாநாயகர் அவருக்கான பணிகளை செய்கிறார் என அமைதிப்படுத்தி இருப்பதாக சொல்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+