மகா விஷ்ணு பேசியது முட்டாள்தனம்.. ஆளுநர் பேசியதற்கும் இதற்கும் ஏதோ தொடர்பு.. ஆர்.எஸ் பாரதி சந்தேகம்
சென்னை: மகா விஷ்ணு பேசியது முட்டாள் தனம் என்றும், மகா விஷ்ணு பேச்சுக்கும் ஆளுநர் ரவி பேசியதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர் பாரதி கூறியுள்ளார். அரசு பள்ளியில் மகாவிஷ்ணு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், ஆர் எஸ் பாரதி இவ்வாறு கூறியுள்ளார்.
அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் மன அழுத்தத்தை போக்க ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவர் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மகாவிஷ்ணு பேசுகையில், "மற்ற பிறவிகளில் செய்த பாவங்களால்தான் மறுபிறவி கிடைக்கிறது. போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் மாற்றுத்திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் பிறக்கிறார்கள்.

அது போல் கால், கை இழந்து, கண் பார்வையற்றவர்களாக பிறப்பதற்கு பாவங்கள்தான் காரணம்" என்று பேசினார். அப்போது அங்கிருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் இதனை கடுமையாக எதிர்த்தார். அப்போது அவர், மகாவிஷ்ணு, அறிவற்றவர் என விமர்சனம் செய்தார். இது பெரும் சர்ச்சையானது. இந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வெளியாகியது.
மோட்டிவேஷன் ஸ்பீச் என்ற பெயரில் மகா விஷ்ணு என்பவர் மாணவிகளிடம் ஆன்மிகம் குறித்து சிந்தனைகளை போதித்ததாகவும், மத ரீதியான கருத்துக்களை தெரிவித்ததாகவும் கல்வியாளர்கள், மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சியை பள்ளிகளில் நடத்த தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, 'மகா விஷ்ணு பேசியது முட்டாள் தனம் என்றும், மகா விஷ்ணு பேச்சுக்கும் ஆளுநர் ரவி பேசியதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- இதை திட்டமிட்டு யாரோ செய்கிறார்கள். ஆளுநர் பேசியதற்கும் இது மாதிரியான சம்பவத்திற்கும் ஏதோ ஒரு பின்னணி உள்ளது. அதை அறிந்து புரிந்து, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இது மாதிரி நடக்கக் கூடாது என்று நான் கூட பேசும் போது குறிப்பிட்டேன்.
இது மாதிரி புல்லுருவிகள் ஆங்காங்கே வருவாங்க.. அதை அரசு உடனடியாக கவனித்து 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபோல இனிமேல் நடக்காமல் எல்லோரும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆசிரியருக்கு மட்டும் இல்லை.. பெற்றோருக்கும் இந்த பொறுப்பு உள்ளது. இதுபோல எங்கேயாவது நடந்தால் உடனடியாக கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்கும் என்பதை அமைச்சரின் பேட்டியும் துறையின் அறிக்கையும் காட்டுகிறது.
தமிழகத்தில் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காது என்பதை நிச்சயமாக நம்பலாம். தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்துவது என்று சொல்வதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த ஆர்.எஸ் பாரதி, அது முட்டாள்தனமானது.. அது எப்படி தன்னம்பிக்கையாகும். தமிழ்நாடு கல்வியிலேயே சிறந்து நிற்கிறது. இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது. இதை ஜீரணிக்க முடியாமல் சில சக்திகள் இதை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறார்கள்.
இது பெரியார் பிறந்த மண்.. அண்ணாவால் பக்குவப்படுத்தப்பட்ட மண்.. கருணாநிதியால் வழிநடத்தப்பட்ட மண்.. இன்று முக ஸ்டாலினால் தலைமை தாங்கி நடத்தப்படும் மண். எனவே இதுபோன்ற தவறான மூட நம்பிக்கைகள் தமிழகத்திற்குள் நுழைய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்..நுழையாது" இவ்வாறு அவர் கூறினார்.
கல்வி நிலையங்களில் ஆன்மிகம் பற்றி பேசக்கூடாது.. அண்ணா முதன் முதலாக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு அலுவலங்களில் எந்த கடவுள் படமும் இருக்க கூடாது என்று உத்தரவிட்டார். ஆன்மிகத்தை பேச அதற்கு என்று மன்றம் இருக்கிறது. கல்வி நிலையத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இது மதசார்பற்ற மாநிலம்" என்றார்.
-
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும்












Click it and Unblock the Notifications