கோயம்பேட்டில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்.. சபரிமலை செல்வோருக்கு ஹாப்பி நியூஸ்!
சென்னை: சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூசை நாட்களில் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும். இந்த நாட்களில் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிவார்கள். தோராயமாக சுமார் 5 கோடி பக்தர்கள் வரை ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனை தரிசிக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள்தான் அதிகம். அந்த வகையில் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை நேற்று பிற்பகல் திறக்கப்பட்டது. இன்று மண்டல பூஜை நடைபெறுகிறது. எனவே, தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய புறப்பட்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் ஐயப்ப பக்தர்களுக்கு வசதியாக சில சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பாகவும், வசதியுடன் சென்று திரும்பும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கோயம்பேட்டிலிருந்து பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. தவிர கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை, கடலூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி நேற்று இந்த பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் இது குறித்து கூறுகையில், "பேருந்து இருக்கைகளை டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும். சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி டிச.27 முதல் டிச.30 மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் டிச.26 முதல் 29-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. மேலும், விவரங்களுக்கு 94450 14452, 94450 14424, 94450 14463 எனும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.
பக்தர்களுக்கு இருக்கைகள் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி அல்லாத அதிநவீன சொகுசு பேருந்துககள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருப்பது ஐயப்ப பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications