ஊருக்கு போறீங்களா? தமிழக அரசு பஸ்களில் ஒரே நாளில் 35,140 முன்பதிவு.. தீபாவளிக்கு விறுவிறு புக்கிங்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கிவிட்டது. இதுகுறித்த முக்கிய தகவல்களை போக்குவரத்து துறை தற்போது வெளியிட்டிருக்கிறது.
வழக்கமாக, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.. இதனால், அரசு பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது..

படுக்கை வசதி: அதிலும், நீண்ட தூரம் செல்லக்கூடிய விரைவு பஸ்களில் படுக்கை வசதியுடன் குளிர்சாதன வசதி போன்றவை இருப்பதால் அதிகளவில் பயணிக்க தொடங்கியிருக்கிறார்கள்.. அந்தவகையில், அரசு விரைவு பஸ்களுக்கு 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் நடைமுறையும் உள்ளது. இப்படி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காகவே, தமிழக போக்குவரத்து துறையும் பல்வேறு பேருந்துகளை ஸ்பெஷலாகவே இயக்கி வருகிறது.
அந்தவகையில் நாடு முழுவதும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.. அதன்படி, இன்று காலை நிலவரப்படி அக்டோபர் 29ம் தேதி பயணிக்க 10,542 பேரும், 30ம் தேதி பயணிக்க 9,402 பேரும் முன்பதிவு செய்திருந்தனர்.
பயணிகள்: இப்படித்தான் 2018 ஜனவரி 12ல் அதிகபட்சமாக 32,910 பேர் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், இப்போது அதை விட அதிக பயணிகள் முன்பதிவு செய்திருக்கிறார்களாம்.
அந்தவகையில், தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் நிரம்பி விட்ட நிலையில், பண்டிகை முடிந்து நவம்பர் 3-ந் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு திரும்புவதற்கும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. 1,500 பஸ்களுக்கு முதல் கட்டமாக முன்பதிவு நடந்து வருகிறது. இது தவிர வழக்கம் போல சிறப்பு பஸ்களும் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
முன்பதிவுகள்: வழக்கமாக இயக்கப்படும் விரைவுப் பேருந்துகளுக்கு முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அடுத்த மாதம் 10 மற்றும் 12ம் தேதிகளில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எந்த இடத்திலிருந்து, எவ்வளவு பேருந்துகளை இயக்கலாம் என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டு, போக்குவரத்துத்துறை அதனை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications