தீபாவளி இனிதே முடிந்தது! சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள்
சென்னை: தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இன்ற முதல் இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக 2-ந்தேதி (இன்று) முதல் 4-ந்தேதி வரையில் தினந்தோறும் இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பஸ்களுடன் 3 ஆயிரத்து 165 சிறப்பு பஸ்களும், பிற முக்கிய ஊர்களிலிருந்து 3 ஆயிரத்து 405 பஸ்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 846 பஸ்கள் இயக்கப்படும்.

எனவே, பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தீபாவளி, பொங்கல், விடுமுறை நாட்களை சொந்த ஊர்களில் கொண்டாடவும் கழிக்கவும் சென்னையில் இருக்கும் மக்கள் படையெடுப்பது வழக்கம். அந்த வகையில் அவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் கடந்த திங்கள்கிழமை முதலே இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 5 நாட்கள் விடுமுறையை முடித்துக் கொண்டு சென்னை திரும்ப ஆயத்தமாகினர்.
அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் இருக்க இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications