தீபாவளியையொட்டி மைசூர்-ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் சேவை! தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: பண்டிகை நாட்களில் பொது போக்குவரத்து நிரம்பி வழியும். குறிப்பாக ரயில்கள் மிகுந்த நெரிசலாக இருக்கும். எனவே கூட்டத்தை குறைக்க சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுவது வழக்கமானதுதான். அந்த வகையில் மைசூர் டூ ராமநாதபுரத்துக்கு சிறப்பு ரயிலை அறிவித்திருக்கிறது தெற்கு ரயில்வே.
மைசூரிலிருந்து இயக்கப்படும் இந்த ரயில், மாண்டியா, ராமநகரம், கெங்கேரி, பெங்களூர், பெங்களூர் கன்டோன்மென்ட், ஒசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி என பயணித்து இறுதியாக ராமநாதபுரம் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயிலில் இரண்டு இரண்டாம் வகுப்பு ஏசி பெட்கள், 5 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 8 ஸ்லீப்பர் பெட்டிகள், 4 முன்பதிவில்லா பெட்டிகள், 1 இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் 1 லக்கேஜ் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். செப்.15ம் தேதி முதல் இந்த ரயில் திங்கட்கிழமை தோறும் அக்.27ம் தேதி வரை இயக்கப்படுகிறது. முதல் ரயில் செப்.15ம் தேதியன்று மைசூரிலிருந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 10 மணிக்கு ராமநாதபுரத்திற்கு வந்து சேர்கிறது. முன்பதிவு விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
South Western Railway has notified Special trains between Mysuru - Ramanathapuram- Mysuru weekly special trains to clear extra rush of passengers during Dasara, Diwali,& Chhath Festival
— Southern Railway (@GMSRailway) September 13, 2025
Advance Reservation for the above Special Trains are open from #SouthernRailway End pic.twitter.com/yGnLabNS18
அதேபோல, மறுபுறம் ராமநாதபுரத்திலிருந்து செப்.16ம் தேதி செவ்வாய் கிழமை மதியம் 3.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, ஓசூர், பெங்களூர் கன்டோன்மென்ட், பெங்களூர், கெங்கேரி, ராமநகரம், மாண்டியா வழியாக இறுதியாக அடுத்த நாள் அதாவது புதன் கிழமை காலை 7.45 மணிக்கு மைசூர் வந்து சேரும். இரண்டு மார்க்கத்திலும் திங்கள்/செவ்வாய் என தலா 7 வாரங்களுக்கு ஒரு நாள் என மொத்தம் 7 நாட்கள் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பு தென் மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பண்டிகை நாட்களில் தனியார் பேருந்துகள் கொள்ளை லாபத்திற்கு டிக்கெட்டுகளை விற்கின்றன. அதை ஒப்பிடும்போது சிறப்பு ரயில் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியிருக்கின்றனர்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications