பெண் ஐபிஎஸ்ஸுக்கு பாலியல் தொல்லை.. சிறப்பு டிஜிபியை சஸ்பெண்ட் செய்யாதது தவறு.. ஹைகோர்ட் கண்டிப்பு
சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்ட வழக்கில் சிறப்பு டிஜிபியை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும், அவரை சஸ்பெண்ட் செய்யாமல் போனது தவறு என்று சென்னை ஹைகோர்ட் கடிந்துகொண்டுள்ளது.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது தமிழகத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்க விடாமல் தடுக்க முயன்ற எஸ்பி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதோடு சிறப்பு டிஜிபி கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இன்னும் சில போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை
இந்த வழக்கை விசாரித்து வரும் சென்னை ஹைகோர்ட், இதில் தமிழக அரசுக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்கி வருகிறது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் மீது தமிழக அரசு கண்டிப்புடன் செயல்பட வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் கூறியுள்ளது. நேற்று இந்த வழக்கின் விசாரணையில் பேசிய ஹைகோர்ட் நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ், சிறப்பு டிஜிபியை பணியிடை நீக்கம் செய்யாமல் போனது தவறு.

அதிக ரேங்க்
இவரை பணியிடை நீக்கம் செய்யாமல் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றியது தவறு. இது விசாரணையை பாதிக்கும். சிறப்பு டிஜிபியை விட குறைந்த ரேங்க் கொண்ட அதிகாரிதான் தற்போது இந்த வழக்கில் விசாரணை செய்கிறார். அப்படி இருக்கும் போது சிறப்பு டிஜிபி விசாரணையில் தலையீடுகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது . சஸ்பெண்ட் செய்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது.

பெரிய குற்றம்
சிறப்பு டிஜிபி மீது வைக்கப்பட்டு இருப்பது பெரிய குற்றசாட்டு. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள போது சிறப்பு டிஜிபி மட்டும் கட்டாய காத்திருப்புக்கு அனுப்பப்பட்டது தவறு. கட்டாய காத்திருப்பு என்பது தண்டனை அல்ல.. அது சலுகை. சம்பளம் வாங்கிக்கொண்டு, தனக்கு போஸ்டிங் போடும் வரை.. பிரச்சனையின்றி காத்திருப்பதற்கு பெயர் தண்டனை கிடையாது.

வேறு ஒருவர்
இதே புகார் சிறிய போலீஸ் அதிகாரி மீது சுமத்தப்பட்டு இருந்தால் அவர் கண்டிப்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பார். ஆனால் சிறப்பு டிஜிபி என்பதால் அவருக்கு சலுகை வழங்க கூடாது. இவரை விட குறைந்த ரேங்க் கொண்ட அதிகாரி சுதந்திரமாக இந்த விசாரணையை நடத்த முடியாது. விசாரணை மீதான நம்பிக்கைக்கு இது களங்கம் விளைவிக்கும்.

எஸ்பி
எஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டது போல சிறப்பு டிஜிபியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் கடிந்து கொண்டது. இந்த வழக்கை நேரடியாக நாங்கள் கவனித்து வருகிறோம் , இதில் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மார்ச் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications