ராமநாதபுரம் தாம்பரம் இடையே நவம்பர் 3ம் தேதி சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே குட் நியூஸ்
சென்னை: ராமநாதபுரம் தாம்பரம் இடையே ஒரு வழி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் வரும் ஞாயிறு அன்று ராமநாதபுரத்தில் இருந்து புறப்படுகிறது . இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. தீபாவளி கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு ரயில்வே இந்த சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், ரயில் எண். 06162 .. ராமநாதபுரம் - தாம்பரம் இடையே ஒரு வழி சிறப்பு ரயில் வரும் நவம்பர் 3ம் தேதி அன்று தீபாவளி பண்டிகையை ஒட்டி கூட்ட நெரிசலை சமாளிக்க இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் ராமநாதபுரத்தில் பிற்பகல் 3மணிக்கு புறப்படுகிறது. பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று தாம்பரத்திற்கு இரவு 11.40க்கு சென்றடையும். இந்த ஒரு வழி சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. " இவ்வாறு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தெற்கு ரயில்வே சென்னையில் இருந்து திருச்சி, கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர், மங்களூர், நாகர்கோவில் உள்பட பல்வேறு வழித்தடத்தில் தீபாவளி சிறப்பு ரயிலை அறிவித்து அசத்தியது. கடைசி நாளில் திருச்சி, கோவைக்கு முன்பதிவு இல்லா சிறப்பு ரயிலை அறிவித்து இருந்தது. இதனிடையே சென்னையில் இருந்து சென்ற அனைத்து சிறப்பு ரயில்களும் இன்று அந்தந்த ஊர்களில் இருந்து திரும்பி வருகிறது. கடந்த காலங்களை ஒப்பிடும்போது தெற்கு ரயில்வே தாம்பரம் முனையத்தில் இருந்து அதிக ரயில்களை தேவை அறிந்து இயக்கி உள்ளது. இந்த முயற்சியை ரயில் பயணிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
🚨Attention passengers!!!🚆
— Southern Railway (@GMSRailway) November 1, 2024
Train No. 06162 Ramanathapuram - Tambaram One way Special train will be operated to clear extra rush of passengers during #Diwali festival on 03rd November, 2024.
Advance Reservation for the One Way Special Train is open.#SouthernRailway pic.twitter.com/TaLZoquxsR












Click it and Unblock the Notifications