மூட நம்பிக்கையை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படுமா? அமைச்சர் பதில்.. அப்பாவு கொடுத்த ரியாக்ஷன்!
சென்னை: மூடநம்பிக்கையை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டு வரப்படுமா? என திமுக எம்.எல்.ஏ எழிலன் இன்று தமிழக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று வணிக வரித்துறை, போக்குவரத்து துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அதற்கு முன்னதாக கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, ஆயிரம் விளக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன், "அரசியலமைப்பு சட்டம் 51 A(h) பிரிவின் படி, மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காக நம்முடைய அரசு தனி சிறப்பு சட்டம் கொண்டு வருமா?" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "ஒவ்வொரு மக்களும் ஒவ்வொரு நம்பிக்கையை பின்பற்றுகிறார்கள். எனவே, அரசியலமைப்பு சட்டப்படி அவரவர் உரிமைகளை தான் அவர்கள் பாதுகாக்க முடியுமே தவிர எந்த சட்டத்தின் மூலமாகவும் எதையும் நாம் கொண்டு வந்து ஒன்றை தடுப்பதோ, அல்லது ஒன்றை பாதுகாப்பதோ இயலாத ஒரு காரியமாக போய்விடும்.
எனவே நம்முடைய கொள்கைகளை நாம் பின்பற்றலாம். அதில் ஒன்றும் தவறில்லை. அதில் மற்றவர்களை கட்டாயப்படுத்த வேண்டும் என்ற முயற்சி என்பது, ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்குமா என்பதை பார்த்து தான் சொல்ல வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, "டாக்டர் சம்பந்தம் இல்லாத கேள்வியை கேட்டுவிட்டீர்கள். இருந்தாலும், அமைச்சர் நல்ல விளக்கம் கொடுத்துவிட்டார்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications