மார்பில் மிதித்து, முட்டி போட வைத்து சித்ரவதை செய்த மனோவின் மகன்கள்! ஆந்திரா விரைந்தது தனிப்படை
சென்னை: 16 வயது சிறுவன் உள்பட இருவரை உருட்டுக்கட்டையால் தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள பாடகர் மனோவின் மகன்கள் ஆந்திராவில் உள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.
சென்னை ஆலப்பாக்கம் அருகே கால்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், உணவு வாங்க சென்ற கிருபாகரன் ஆகியோரை மனோவின் மகன்கள் ரஃபி, ஷாகீர் ஆகியோர் முட்டி போட வைத்து உருட்டுக் கட்டைகளால் தாக்கியதாக புகார் எழுந்தது.

இந்த தாக்குதல் குறித்து மனோவின் மகன்களுக்கு எதிரான வீடியோ ஆதாரம் வேறு கிடைத்துள்ளது. இதையடுத்து ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் மனோ மகன்களின் நண்பர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆனால் மனோவின் இரு மகன்கள் உள்பட 3 பேரை போலீஸார் தேடி வருகிறார்கள். அவர்கள் ஈசிஆரில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து நேற்று முன் தினம் முதல் அவர்களை தேடி வருகிறார்கள். அவர்களது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனினும் செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து போலீஸார் தேட முயற்சித்து வருகிறார்கள்.
அவர்களது செல்போன் சிக்னல் மாறி மாறி காட்டி வருவதால் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. அந்த வகையில் இன்று 3ஆவது நாளாக அவர்களை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் பாடகர் மனோவின் மகன்கள் ஆந்திராவில் உள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.
நேற்றெல்லாம் ஈசிஆரில் தேடி வந்த நிலையில் இன்றைய தினம் ஆந்திராவுக்கு தனிப்படை விரைந்துள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications