புத்தாண்டு லீவு! ஊருக்கு போறீங்களா? சென்னை - நெல்லை சிறப்பு ரயில் அறிவிப்பு! புக்கிங் தொடங்கிடுச்சு
சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டை ஒட்டி நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 28, ஜனவரி 4 ஆம் தேதி நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 11 மணிக்கு சிறப்பு ரயில்கள் புறப்படும். இதேபோல் மறுமார்க்கமாக டிச 29, ஜனவரி 5 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு மாலை 3.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தாம்பரம் - நெல்லை இடையே இரண்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புத்தாண்டு விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக அறிவிக்கப்படு இருக்கும் இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. காலை 8 மணி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ரயில் புறப்படும் நேரம், நின்று செல்லும் இடங்கள் உள்ளிட்டவைகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
கிறிஸ்துமஸ் - புத்தாண்டுக்கு சொந்த ஊர் செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதும். பேருந்து ரயில்களில் முன்பதிவு டிக்கெட் விற்று தீர்ந்துவிட்ட நிலையில், சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல்லை டூ தாம்பரம்
வண்டி எண் 06166 திருநெல்வேலியில் இருந்து டிசம்பர் 28 மற்றும் ஜனவரி 4 ஆம் தேதிகளில் இரவு 11.30 மணிக்கு தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் டிசம்பர் 29 மற்றும் ஜனவரி 05 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நெல்லை வந்தடையும். இரண்டு சேவைகளாக இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
நின்று செல்லும் இடங்கள்
1 ஏசி பெட்டி, 2 ஏசி மூன்றடுக்கு பெட்டி, 9 படுக்கை வசதிகள் கொண்ட பெட்டி, 4 பொதுப்பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் 2 இந்த ரயிலில் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த ரயிலானது கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம் விழுப்புரம், மேல்வருத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications