சென்னை டூ மைசூர் சிறப்பு வந்தே பாரத் ரயில்.. இன்று முதல் சேவை! பெங்களூர், கோவை லிஸ்டில் புது நகரம்
சென்னை: கர்நாடக மாநிலம் மைசூருக்கு சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், "தினமும் சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வாரம் 6 நாள்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை மட்டும் இயக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் புதன்கிழமைதோறும் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.

அதன்படி இன்று நவம்பர் 29 ஆம் தேதி, டிசம்பர் 6 ஆம் தேதி, 13 ஆம் தேதி, 20 ஆம் தேதி, 27 ஆம் தேதி ஆகிய நாட்களில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. வழக்கமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - மைசூரு ரயில் நிலையம் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் வழித் தடத்தில் இந்த ரயிலும் இயக்கப்படும். இதற்கான பயணச் சீட்டு முன்பதிவு தொடங்கி உள்ளது." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் சென்னை - கோவை இடையிலும் வந்தே பாரத் சிறப்பு ரயில் நேற்று முதல் தொடங்கப்பட்டது. இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கூட்ட நெரிசலைத் கட்டுப்படுத்தும் வகையில் சென்னை சென்ட்ரல் - கோவை மற்றும் கோவை - சென்னை இடையே செவ்வாய்க்கிழமைகளில் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் நவம்பர் 28 முதல் ஜனவரி 30 ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு 2.15 மணிக்கு கோவை சென்றடையும். மறுமாா்க்கமாக கோவை - சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய் கிழமை நவம்பர் 28 ஆம் தேதி முதல் ஜனவரி 30 ஆம் தேதி வரை செவ்வாய் கிழமைகளில் கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும்." என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதேபோல், கடந்த 20 ஆம் தேதி முதல் சென்னை - பெங்களூரு இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டது. "சென்னை சென்ட்ரலிலிருந்து திங்கள்கிழமை மாலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (எண் 06031) காட்பாடிக்கு மாலை 6.48 மணிக்கும் பெங்களூருக்கு இரவு 10 மணிக்கும் சென்றடையும்.
மறுமாா்க்கமாக பெங்களூரை அடுத்த யஷ்வந்த்பூரில் இருந்து செவ்வாய்க்கிழமை நவம்பர் 21 ஆம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06032) காட்பாடிக்கு நள்ளிரவு 2.28 மணிக்கும் சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 4.20 மணிக்கும் வந்தடையும். இதற்கான பயணச் சீட்டு முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது." என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications