Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை டூ நெல்லைக்கு வாரந்தோறும் சிறப்பு ரயில்கள்! கோடை லீவுக்கு இன்ப அதிர்ச்சி தந்த தெற்கு ரயில்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் 16, 23, 30 ஆம் தேதிகளில் சென்னை எக்மோரில் இருந்து நெல்லைக்கும், வரும் 17, 24, மே 1 ஆம் தேதிகளில் நெல்லையில் இருந்து சென்னை எக்மோருக்கும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோன்று 10 (நாளை), 19, 26 ஆம் தேதிகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கும், வரும் 11, 20, 27 ஆகிய தேதிகளில் நெல்லை டூ தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோடை விடுமுறையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த சிறப்பு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோன்று சென்னை மங்களூர் இடையேயான சிறப்பு ரயில் சேவையினையும் நீட்டித்துள்ளது.

Southern Railway

கோடைக்கால சிறப்பு ரயில்கள்

கோடைக்காலம் ஆரம்பித்துள்ளதாலும், பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளதாலும் வேலைக்காக தங்கி பணிபுரிந்து வருபவர்கள் பலரும் சொந்த ஊர் செல்ல திட்டமிடுவார்கள். பஸ்கள், ரயில்களில் தங்கள் பயணத்தை திட்டமிட்டு வருகிறார்கள். ஆனால் பஸ்களில் கட்டணம் அதிகமாக இருப்பதால் பலரும் ரயில்களில் செல்லவே விருப்பப்படுகின்றன.

ரயில்களில் டிக்கெட்டுகள் ஏற்கனவே புக் ஆகி இருப்பதால் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும் என காத்திருந்தனர். இந்த நிலையில் தான் தெற்கு ரயில்வே பயணிகளுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. அதன்படி ஏற்கனவே தமிழ் புத்தாண்டு நாளை ஒட்டி சென்னை டூ தென்காசி மற்றும் சென்னை டூ திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டன.

சென்னை எக்மோர் டூ நெல்லை

இந்த நிலையில் கோடைக்கால சிறப்பு ரயில்களை தற்போது தெற்கு ரயில்வெ அறிவித்துள்ளது. இதன்படி, நெல்லை டூ தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கும் சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. கோடை விடுமுறையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி பயணம் மேற்கொள்ள இந்த சிறப்பு ரயில் சேவைகளை பயன்படுத்திகொள்ளலாம்.

நெல்லையில் இருந்து வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு எழும்பூருக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்-06070) இயக்கப்படுகிறது. இதேபோன்று எழும்பூரில் இருந்து வருகிற 17, 24 மே 1 ஆகிய தேதிகளில் மதியம் 1.25 மணிக்கு நெல்லைக்கு சிறப்பு ரெயில் (06069) இயக்கப்படுகிறது.

இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மெல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக இயக்கப்படும். இதற்கான புக்கிங் தொடங்கியுள்ளது.

தாம்பரம் டூ நெல்லை

இதேபோன்று வரும் 10 (நாளை) 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயிலும், வரும் 13, 20, 27 ஆகிய தேதிகளில் மதியம் 1.55 மணிக்கு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் (06165) இயக்கப்படுகிறது.

வண்டி எண் - 06166 (திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்) வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மெல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக திங்கட்கிழமை காலை 11.35 மணிக்கு சென்னை தாம்பரத்தை அடையும்.

வண்டி எண் - 06165 (தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்): இந்த ரயில் திங்கட்கிழமை மதியம் 1.55 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, அதே வழித்தட நிலையங்கள் வழியாக மறுநாள் அதிகாலை நெல்லை ஜன்ஷனை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இதேபோன்று சில சிறப்பு ரயில் சேவைகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

ஏற்கனவே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ள நிலையில் அந்த ரயில்களின் சேவைகள் மீண்டும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் தொடர் கோரிக்கைகளை அடுத்து, கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கீழ்க்கண்ட ரயில் ரயில்களின் சேவை காலம் மேலும் ஒரு பயணத்திற்காக நீட்டிக்கப்பட்டுள்ளது:

வண்டி எண் - 06126 (மங்களூர் சென்ட்ரல் - சென்னை எக்மோர்) ரயில் சேவை வரும் 20 ஆம் தேதி திங்கட்கிழமை கூடுதலாக ஒரு சேவை இயக்கப்படுகிறது.
வண்டி எண் - 06125 (சென்னை எக்மோர் - மங்களூர் சென்ட்ரல்) ரயில் சேவை வரும் 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கூடுதலாக ஒரு சேவை இயக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+