சென்னை கொல்லம் இடையே 3 மாதங்களுக்கு அடுத்தடுத்து சிறப்பு ரயில்கள்.. சபரிமலை பக்தர்களுக்கு சர்ப்ரைஸ்
சென்னை: சபரிமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை டூ கொல்லம் இடையே 3 மாதங்களுக்கு வாரந்தோறும் சிறப்பு ரயில்களை அறிவித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களானது, சென்னை எழும்பூரில் இருந்தும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன. வரும் நவம்பர் 18 ஆம் தேதி முதல் ஜனவரி 23 ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சாமி தரிசனம் செய்வார்கள். நடப்பு ஆண்டு மசபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக வரும் நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்படுகிறது. அன்று முதல் மகரவிளக்கு பூஜை வரை 2 மாதத்திற்கு பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக நடை திறந்திருக்கும்.

சிறப்பு ரயில்கள்
தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து சபரிமலை செல்வதால் பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனை தவிர்க்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் மற்றும் சென்டிரலில் இருந்து கொல்லத்திற்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை சென்ட்ரல் - கொல்லம்
சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே (வண்டி எண் 06119) சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை சென்னை சென் ட்ரலில் இருந்து கொல்லத்திற்கு புறப்படும். வரும் 18 ஆம் தேதி முதல் இந்த ரயில் மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமை இந்த சிறப்பு ரயிலானது இயக்கப்படும்.
கொல்லம் - சென்னை சென்ட்ரல்
மறுபுறம் கொல்லம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06120) வாரந்தோறும் வியாழக்கிழமை இயக்கப்படும். வரும் 19 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயிலானது இயக்கப்படும். கொல்லத்தில் காலை 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு செண்ட்ரல் வந்தடையும்.
எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கும்?
சென்னை முதல் கொல்லம் வரையிலான பயணத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் இந்தச் சிறப்பு ரயில் நின்று செல்லும். தமிழகத்தில், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்தச் சிறப்பு ரயிலில் 16 ஏசி 3 டயர் எகனாமி பெட்டிகள் உள்பட மொத்தம் 18 பெட்டிகள் இடம்பெறும். இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நவம்பர் 7ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கியது. .


Click it and Unblock the Notifications
