Oneindia Special: அன்ரிசர்வ் ரயில் பெட்டிகளில் 'சிதையும்' தென் மாவட்ட மக்களே! உங்களுக்கு குட் நியூஸ்!
சென்னை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் சரி.. தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் சரி ரயில் பயணம்தான் கை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. டிக்கெட் கிடைக்காமல் போனாலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நெரிசலுக்கு இடையேயும் கழிவறைக்கு அருகே அமர்ந்தும் துயரத்துடன் பயணிக்கும் தென் மாவட்ட மக்களுக்கு 'தற்காலிக' குட் நியூஸ் இது!
கோடைகாலம், பண்டிகை காலங்களில் தென் மாவட்ட மக்கள் பயணிப்பதற்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிமுகம் செய்து வருகிறது. கோடை காலத்தில் மே மாதம் 16-ந் தேதி முதல் ஜூன் 29-ந் தேதி வரை வியாழன், சனிக்கிழமைகளில் தாம்பரம்- கொச்சுவேலி சிறப்பு ரயில் இரு இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில் 14 குளிர்சான பெட்டிகளை மட்டுமே கொண்டதாக இருந்தது.

தற்போது பண்டிகை காலம் என்பதால் மீண்டும் தாம்பரம்- கொச்சுவேலி; கொச்சுவேலி- தாம்பரம் இடையேயான அதே குளிர்சாதன ரயில் இயக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 6-ந் தேதி முதல் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
செப்டம்பர் 13, செப்டம்பர் 20 ஆகிய தேதிகளில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கும் செப்டம்பர் 15,22 ஆகிய தேதிகளில் இரவு 9.40 மணிக்கும் புறப்படும்.
மறுமார்க்கமாக கொச்சுவேலியில் இருந்து செப்டம்பர் 9,14, 16, 21,23 ஆகிய தேதிகளில் கொச்சுவேலியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும்.
தாம்பரம்- கொச்சுவேலி சிறப்பு ரயில் (14 குளிர்சாதன பெட்டிகளுடன்) pic.twitter.com/8HdrsiXA0H
— மா.ச. மதிவாணன் (@masamathi) September 9, 2024

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புர, விருத்தாசலம், அரியலூர், ஶ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஶ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டக்கரா, குண்டாரா, கொல்லம் வழியாக கொச்சுவேலி சென்றடையும். கொச்சுவேலியில் இருந்து மேற்கண்ட ரயில் நிலையங்கள் வழியாக தாம்பரம் வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில் குறித்து மக்கள் அதிகம் அறிந்து கொள்ளாததால் ஒவ்வொரு பயணத்தின் போதும் ஏராளமான இருக்கைகள் காலியாகவே உள்ளன. ஆகையால் வார இறுதி நாட்களான செப்டம்பர் 13, 20-ல் தென் மாவட்டங்கள் செல்வோர் இந்த குளிர்சாதன ரயிலில் ஜாலியாக பயணிக்கலாமே!












Click it and Unblock the Notifications