Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில் பயணிகளுக்கு "அடி தூள்" அறிவிப்பு! மைசூர் - காரைக்குடி, நாகர்கோவில் - சென்னைக்கு சிறப்பு ரயில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காரைக்குடி - மைசூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென் மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சுதந்திர தினம் மற்றும் வார இறுதி விடுமுறையை ஒட்டி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மைசூர் - காரைக்குடிக்கு இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரயில் இயக்க அட்டவணையை வெளியிட்டுள்ளது தென் மேற்கு ரயில்வே.

அதேபோல, நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கும், திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டிற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18 ஆம் தேதி மற்றும் 25 ஆம் தேதி ஆகிய நாட்களில் நாகர்கோவில் - தாம்பரம் ரயில் இயக்கப்படும் என்றும், மறு மார்க்கமாக தாம்பரம் - நாகர்கோவில் ரயில் 19 மற்றும் 26 ஆம் தேதிகளில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 11 ஆம் தேதி (இன்று) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Special Trains from Mysuru to Karaikudi nagercoil to tambaram nellai to chengalpattu

ரயில் சேவை: நமது நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து சேவையாக விளங்கி வருவது ரயில் சேவை தான். நாள்தோறும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயில் போக்குவரத்தை தம் அன்றாட பயணங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். குறைந்த கட்டணம், விரைவான பயணம் உள்ளிட்ட காரணங்களுக்காக பெரும்பாலான மக்கள் ரயில் சேவையை விரும்புகின்றனர்.

பயணிகளின் வசதிக்காக அந்தந்த ரயில்வே கோட்டங்கள் சார்பில் பண்டிகை தினங்கள், வார விடுமுறை நாட்கள் மற்றும் சிறப்பு தினங்களில் நகரங்களுக்கிடையையும் மாநிலங்களுக்கு இடையேயும் அண்டை மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: அந்த வகையில் சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாட்களை கருத்தில் கொண்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க மைசூர் காரைக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வண்டி எண். 06295 மைசூர்- காரைக்குடி சிறப்பு ரயில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி புதன்கிழமை மற்றும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி சனிக்கிழமைகளில் மைசூரில் இருந்து 21.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் 2.45 மணிக்கு காரைக்குடியை வந்தடையும்.

காரைக்குடி - மைசூர் சிறப்பு ரயில்: மறு மார்க்கத்தில் வண்டி எண். 06296 காரைக்குடி மைசூர் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வியாழக்கிழமை மற்றும் ஆகஸ்ட் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காரைக்குடியில் இருந்து 19.00 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 9.10 மணிக்கு மைசூரை சென்றடையும். இந்த ரயிலில் இரண்டு ஏசி டயர் பெட்டிகள் 3 ஏசி டயர் பெட்டிகள் ஆறு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஆறு பொது வகுப்பு பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இருக்கும்.

இந்த ரயில் மைசூர் - மாண்டியா - மடூர் - ராமநகரம் - கெங்கேரி - கே எஸ் ஆர் பெங்களூர் - பெங்களூர் கண்ட்டோன்மென்ட் - கிருஷ்ணராஜபுரம் - பங்காருபேட்டை - குப்பம் - சேலம் - நாமக்கல் - கரூர் - திருச்சி - புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று காரைக்குடிக்கு செல்லும்.

நின்று செல்லும் இடங்கள்: இந்த ரயில் இரவு 9.30 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு 10.25 மணிக்கு மாட்டியா 10.47 மணிக்கு மடோர் 11.20 மணிக்கு ராமநகரம் 11:52 மணிக்கு கெங்கேரி 12.30 அல்லது 12.40 மணிக்கு கே.எஸ்.ஆர் பெங்களூர், 12.52 மணிக்கு பெங்களூர் கண்ட்ரோல்மெட் ஒன்று ஐந்து மணிக்கு கிருஷ்ணராஜபுரம் 1.55 மணிக்கு பங்காருபேட்டை 2.25 மணிக்கு குப்பம், 5.50 மணிக்கு சேலம் 6.40 மணிக்கு நாமக்கல் 7.10 மணிக்கு கரூர் 9.50 மணிக்கு திருச்சி 10:48 மணிக்கு புதுக்கோட்டை, 12.45 மணிக்கு காரைக்குடி வந்தடையும்.

மறு மார்க்கத்தில் காரைக்குடி மைசூர் சிறப்பு ரயில் காரைக்குடியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு 7:40 மணிக்கும், திருச்சிக்கு 8.40, கரூரில் 10.10 நாமக்கல் 10.43, சேலம் 11.45, குமாரபுரம் 3.50, பங்காருபேட்டை 4.23, கிருஷ்ணராஜபுரம் 5:15, பெங்களூரு கண்ட்ரோன்மென்ட் 5.28, பெங்களூர் 6.5, கெங்கேரி 6.35, ராமநகரம் 7.03, மடூர் 7.30, மாண்டியா 7.45, என கடந்து மைசூருக்கு 9.10 மணிக்கு சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில்: இதே போன்று நாகர்கோவில் - தாம்பரம் இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்க அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து வருகின்ற 18, 25 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு ரயில் புறப்படும். மறு மார்க்கத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து 19, 26 ஆகிய தேதிகளில் பகல் 3.30 மணிக்கு சிறப்பு ரயி்ல்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவு 11ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை - செங்கல்பட்டு சிறப்பு ரயில்: மேலும், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து வருகின்ற ஆகஸ்ட் 13, 18 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கும், மறு மார்க்கத்தில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து வருகின்ற 14, 19 ஆகிய தேதிகளில் மாலை 5.55 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவும் 11 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+