தமிழகத்தில் செப்.7 முதல் 9 சிறப்பு ரயில்கள் இயக்கம்- நாளை முதல் முன்பதிவு தொடக்கம்- முழு விவரம்
சென்னை: தமிழகத்தில் வரும் 7-ந் தேதி முதல் 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் கால கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7-ந் தேதி முதல் ரயில் சேவைகளை மாநிலத்துக்குள் இயக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதனை ஏற்று செப்டம்பர் 7-ந்தேதி முதல் 9 சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
சென்னை- கோயம்புத்தூர் இடையே 3 சிறப்பு ரயில்கள், சென்னை மதுரை இடையே 2 சிறப்பு ரயில்கள், சென்னை- திருச்சி; கோவை- மயிலாடுதுறை; சென்னை- காரைக்குடி; சென்னை- தூத்துக்குடி இடையே இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர்.
ரயில்கள் விவரம்:
1) சென்னை சென்ட்ரல் - கோவை- சென்னை சூப்பர்பாஸ்ட் இண்டர்சிட்டி (T. No. 02675/02676)

2) கோவை- மயிலாடுதுறை- கோவை- ஜன்சதாப்தி (செவ்வாய் தவிர) (Train No. 02084/02083)

3) சென்னை சென்ட்ரல்- கோவை- சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (தினந்தோறும்) (Train No. 02679/02680)

4) சென்னை சென்ட்ரல்- கோவை- சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (தினந்தோறும்( (Train No. 02673/02674)

5) சென்னை எழும்பூர்- திருச்சி- சென்னை எழும்பூர் (Tr.No: 06795/06796)

6) சென்னை எழும்பூர்- காரைக்குடி- சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் (தினந்தோறும்) (T. No. 02605/02606)

7) சென்னை எழும்பூர்- மதுரை- சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் (தினந்தோறும்) (Train No. 02635 / 02636)

8) சென்னை எழும்பூர்- மதுரை- சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் (தினந்தோறும்) (Train No. 02637/02638)

9) சென்னை எழும்பூர்- தூத்துக்குடி- சென்னை எழும்பூர் சூப்பர் பாஸ்ட் (தினந்தோறும்) (T. No. 02693/02694)

-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications