Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுதந்திர தின லீவு: நெல்லை, நாகர்கோயில் பயணிகளுக்கு குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, செங்கல்பட்டு, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதால் பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் இருந்து வேலை காரணமாகவும், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காகவும் தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னைக்கு வந்து செல்கின்றனர். சென்னையில் இருக்கும் வெளிமாவட்ட மக்கள் பலரும் வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். இதனால், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

Train Passanger

அதேபோல, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் அவ்வப்போது தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில், சுதந்திர தின விழா மற்றும் வார விடுமுறையையொட்டி பயணிகள் அதிக அளவில் ஊருக்குச் செல்வார்கள் என்பதால், செங்கல்பட்டு, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான பதிவு இன்றுமுதல் தொடங்குகிறது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்ட் 13, 18 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும். மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து ஆகஸ்ட் 14, 19 ஆகிய தேதிகளில் மாலை 5.55 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். மறுநாள் காலை 5.50 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக இயக்கப்படவுள்ளது.

Train Passanger

அதேபோல, நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு ஆகஸ்ட் 18, 25 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து ஆகஸ்ட் 19, 24 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படவுள்ளது.

மேலும், மங்களூர்-கொச்சுவேலி இடையே ஆகஸ்ட் 17 ஆம் தேதியும், மறுமார்க்கமாக ஆகஸ்ட் 18 ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டுக்கு தொடங்கியுள்ளதாகவும், பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+