இந்த 4 தேதிகளை நோட் பண்ணிக்கோங்க! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தங்கள் செய்ய சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய 4 தேதிகளில் முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SIR பணிகளின் ஒருபகுதியில் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர். அவர்கள் வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18ஆம் தேதி கடைசி நாள்.

தி.மு.க சார்பில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்தல் முகவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க சார்பில் 64 ஆயிரம் முகவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒரு முகவர், நாளொன்றுக்கு 50 வாக்காளர் சேர்ப்பு படிவங்களை மட்டுமே வழங்கலாம் என்ற கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இதுவரை 92,626 படிவங்கள் பெயர் சேர்ப்புக்காகவும் (படிவம் 6), 1,007 படிவங்கள் பெயர் நீக்கத்திற்காகவும் (படிவம் 7) அளிக்கப்பட்டுள்ளன. இறந்த வாக்காளர் தவிர சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் சேர இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான கால அளவு இருக்கும் நிலையில், இதுவரை ஒரு லட்சத்திற்கும் குறைவான 6 ஆம் எண் படிவங்கள்தான் வந்துள்ளன.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். இந்த சிறப்பு முகாம் வருகிற 27, 28 ஆம் தேதி (சனி, ஞாயிறு) மற்றும் ஜனவரி 3,4 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 6.11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தங்கள் செய்ய சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் டிச.27, 28 ஜன. 3, 4 தேதிகளில் முகாம் நடைபெறும் என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று அறிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2026 அன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் 19.12.2025 முதல் 18.01.2026 வரை நடைபெறும்.
ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 27.12.2025 (சனிக்கிழமை) 28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) 03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் படிவம்-6 22 உறுதிமொழி படிவத்துடன் (Declaration Form) சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
மேலும், ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்தவொரு வாக்காளரும், முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபணை தெரிவிக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள பெயரை நீக்க கோரவோ படிவம்-7 மூலம் விண்ணப்பிக்கலாம்.
முகவரி மாற்றுதல் / ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய/ வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) மாற்றம் செய்ய / மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம். சிறப்பு முகாம்கள் சீராக நடைபெறவும். இச்செயல் திட்டம் பயனுள்ளதாக அமல்படுத்தப்படவும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications