Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

களத்தில் 77000 BLOக்கள்.. தமிழகத்தில் தீவிரமாக ‘SIR'.! களமிறங்கிய தேர்தல் ஆணையம்.. எப்படி நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீகாரைத் தொடர்ந்து தமிழகத்திலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி நேற்று தொடங்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் சுமார் 77 ஆயிரம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணியானது எப்படி மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட சில விளக்கங்களை பார்க்கலாம்..

புதிய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலை புதுப்பிப்பது வழக்கம். இது வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் என அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் சார் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

இதில் சுமார் 60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் இந்திய அளவில் இந்த விவகாரம் பேசு பொருளானது. இதற்கிடையே தமிழகத்திலும் 2026 தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

sir election commission tamilnadu

வாக்காளர் பட்டியல்

வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்களின் பெயர்கள் சரியாக இடம்பெறுவதை உறுதிசெய்யவும், இரட்டை பதிவுகள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கவும் தேர்தல் ஆணையம் இந்த விசேஷ கணக்கெடுப்பை மேற்கொள்கிறது. ஏற்கனவே பீகாரில் தொடங்கிய இந்த சிறப்பு திட்டம், தற்போது தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான முன்னோடிப் பயிற்சிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டங்கள் கடந்த வாரம் நடத்தப்பட்டன.

சிறப்பு தீவிர திருத்தம்

தமிழகம் முழுவதும் மொத்தம் 77 ஆயிரம் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLO) இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வீடு வீடாக சென்று தேர்வுசெய்யப்பட்ட படிவங்களை வழங்கியும், நிரப்பப்பட்ட படிவங்களை திரட்டியும் வருகின்றனர். சென்னை மண்டலத்தில் மட்டும் 40,04,694 வாக்காளர்களுக்கு, 3,718 வாக்குச் சாவடி அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்படுகின்றன. சென்னை மொத்தம் 16 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட நிலையில், ஒவ்வொரு பகுதியில் BLOக்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

SIR எப்படி நடைபெறும்?

வீடுகளுக்கு வழங்கப்படும் இரட்டைப் படிவங்களை மக்கள் முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பத்துடன் மீண்டும் BLO களிடம் ஒப்படைக்க வேண்டும். BLOக்கள் மறுமுறை வருகை செய்யும் போது அதனை வழங்க வேண்டும். மக்களிடமிருந்து பெறப்படும் படிவங்கள் மட்டுமே புதிய வாக்காளர் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய அல்லது நீக்குவதற்குப் பயன்படுத்தப்படும். படிவங்களைச் சமர்ப்பிக்கும் கடைசி நாள் டிசம்பர் 4 என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தற்காலிக வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

தேர்தல் ஆணையம்

வாக்காளர் பதிவுச் செயல்முறைகளில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் பொதுமக்கள் '1950' என்ற இலவச அழைப்பு எண்ணைத் தொடர்புகொள்ளலாம். இதன் மூலம் வாக்காளர் பட்டியல் திருத்தம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் போன்ற விவரங்களைப் பற்றிய விளக்கங்களை பெறலாம். முன்னதாக தேர்தல் துணை ஆணையர் பானு பிரகாஷ் மற்றும் இயக்குநர் கே.கே. திவாரி ஆகியோர் சென்னை வந்தனர். மாநில தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற மதிப்பீட்டு கூட்டத்தில் கலந்து கொண்டு திருத்தப் பணிகளின் குறித்த முன்னேற்பாடுகள் ஆய்வு செய்தனர். இருவரும் அடுத்ததாக பல மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த பட்டியல் சரிபார்க்கப்பட்டு ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+