இன்று தமிழ் புத்தாண்டு.. சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு... கோயில்களில் கட்டுப்பாடுகள் என்ன?
சென்னை: இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று சித்திரை 1ஆம் தேதி, தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகளவில் ஒன்றுகூடினால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், கோயிலுக்கு வரும் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

கொரோனா நெறிமுறைகள்
மேலும், கோயிலில் பக்தர்கள் கொரோனா நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றத் தேவையான நடவடிக்கைகள் அறநிலையத் துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பிலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கோயிலில் தனிமனித இடைவெளியை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில்
இந்நிலையில், இன்று காலை 3 மணி முதலே உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மனை வழிபாடு செய்ய நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்கக் கவசமும் வைர கிரீடமும் சாத்தப்படும்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை
இன்று காலை 6 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 4 கோபுர வாசல்கள் வழியாகவும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளி
இங்கு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் பெரும்பாலும் மாஸ்க்குகளை அணிந்துள்ளனர். இருப்பினும், கோயில்களில் யாரும் தனிமனித இடைவெளியை முறையாகப் பின்பற்றுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதை உறுதி செய்யவும் முறையான அதிகாரிகள் இல்லை எனக் கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications