Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில் பயணிகளின் பல நாள் கனவு சார்.. கண் முன்னே நிறைவேறுதே.. அதிரடியாக மாறுது.. தெற்கு ரயில்வே சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெற்கு ரயில்வேயில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட வேகத்தில் ரயில்கள் இனி இயங்க போகிறது. தண்டவாளம் மேம்படுத்தும் பணி பல்வேறு வழித்தடங்களில் ரூ.1,240 கோடி செலவில் நடந்து வரும் நிலையில், பல்வேறு ரயில்களில் வேக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. 170 ரயில்களின் வேகம் அதிரடியாக அதிகரிக்கப்பட்டிருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்திய ரயில்கள் குரூப்-ஏ வழித்தடத்தில் 160 கிமீ வேகத்திலும், குரூப்-பி வழித்தடத்தில் 130 கிமீ வேகத்திலும் இயக்க திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில் அதிகபட்சமாக 130 கிமீ வேகத்தில் ரயில்கள் சில வழித்தடங்களில் இயக்குகின்றன. பெரும்பாலான வழித்தடங்களில் 110 கிமீ வேகம் வரை ரயில்கள் இயக்கப்படும் நிலை இருக்கிறது. அதேநேரம் பல்வேறு வழித்தடங்கள் இன்னும் 110 கிமீ வேகத்தில் கூட செல்ல முடியாத அளவிற்கு தண்டவாள கட்டமைப்பு இருக்கிறது. அங்கெல்லாம் அதிகபட்சம் 90 கிமீ வேகத்தில் தான் ரயில்கள் செல்கின்றன..

Speed up of 170 express trains due to deregulation of speed limit on Southern Railway

தெற்கு ரயில்வே கடந்த ஓராண்டில் 413 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகளை மேம்படுத்தியது. இதன் காரணமாக விரைவு ரயில்கள் வேகம் முன்பைவிட அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல்-கூடூர், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல்-ரேணிகுண்டா ஆகிய வழித்தடங்களில் மணிக்கு 110 கிமீ வேகத்தில் இருந்து 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. இதுதவிர தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது.

அதற்காக சென்னை உள்பட முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பாதை அமைப்பது போன்ற பணிகளை தெற்கு ரயில்வே விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது. ரயில் பாதைகளில் தண்டவாளத்தின் தரத்தை மேம்படுத்துவது, நவீன சிக்னல்கள் அமைப்பது, பாலங்களை வலுப்படுத்துவது போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் உள்ள முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், கூடுதல் பாதை அமைப்பது, ரயில் பாதையின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது.

குறிப்பாக சொல்வது என்றால், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மெதுவான பாதை, கரூர்-திண்டுக்கல், திருவாரூர்-காரைக்குடி, நீடாமங்கலம்-மன்னார்குடி, திருச்சி-ராமேசுவரம், விருதுநகர்-தென்காசி, மதுரை-திருமங்கலம், வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி, போத்தனூர்-பொள்ளாச்சி, பொள்ளாச்சி-பாலக்காடு, கன்னியாகுமரி-திருவனந்தபுரம், எர்ணாகுளம்-திருவனந்தபுரம், மதுரை-மானாமதுரை, கொருக்குப்பேட்டை-அத்திப்பட்டு 3-வது, 4-வது பாதை, விழுப்புரம்-தஞ்சாவூர், மயிலாடுதுறை-திருவாரூர், எர்ணாகுளம்-ஆலப்புழா, ஆகிய வழித்தடங்களில் ரயில் பாதைகளின் தரத்தை உயர்த்துவது, சிக்னல் தொழில்நுட்ப மேம்பாடு, வளைவுகளை நீக்குவது, தேவையற்ற நுழைவுகளை அகற்றுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் தெற்கு ரயில்வேயில் 1,272 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, 110 கி.மீ. வேகம் வரை விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில் கடந்த நிதி ஆண்டில் 75 நிரந்தர வேக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது. இதன்மூலம், 170 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, பயண நேரம் கணிசமாக குறைந்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் ரயில் தண்டவாளம் புதுப்பித்தல் பணிக்காக மட்டும் மத்திய பட்ஜெட்டில் ரூ.1,240 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், பல்வேறு வழித்தடங்களில் தண்டவாளம் மேம்படுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டிருக்கிறது தண்டவாளம் புதுப்பித்தல், சிக்னல் மேம்படுத்துதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முழு பணிகள் முடிந்தால் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட வேகத்தில் ரயில்களை இயக்க முடியும்.

வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்தில் 110 முதல் 130 கிமீ வேகத்தில் செல்கின்றன. ஆனால் தமிழகம் முழுவதும் 130 கிமீ வேகத்தில் செல்ல முடியாத நிலையில் இருக்கின்றன. தற்போதைய நிலையில் சென்னை முதல் ஜோலார்பேட்டை வரை, சென்னை முதல் விழுப்புரம் வரை 130 கிமீவேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஜோலார்பேட்டை-கோயம்புத்தூர் பாதையில் மணிக்கு 130 கி.மீ. வேகம் வரை ரயில்களை இயக்குவதற்கு ஏற்ப பணிகள் மேம்படுத்தப்படுகிறது. இந்த பணிகள் முடிந்தால் பயணநேரம் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+