கல்யாண சுந்தரம் வச்சு செய்ய போவது யாரை.. சீமானையா.. திமுகவையா.. புது பொறுப்பு தந்த அதிமுக!

கல்யாண சுந்தரத்துக்கு அதிமுகவில் புதிய பொறுப்பு தரப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேராசிரியர் கல்யாண சுந்தரத்துக்கு அதிமுகவில் புதிய பொறுப்பு தரப்பட்டுள்ளது.. அந்த வகையில் இனி கல்யாண சுந்தரத்திடம் வறுபட போவது சீமானா? அல்லது திமுகவா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பேராசிரியர் கல்யாண சுந்தரம், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர்.. மிகச் சிறந்த பேச்சாளர். தமிழகம் முழுக்க தெரிந்த பாப்புலர் முகம்.

அடிப்படையில் இவர் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்தவர்.. பிறகுதான் நாம் தமிழர் கட்சியின் மிக முக்கியமானவராக உயர்ந்தார்.. கிட்டத்தட்ட 11 வருஷம் சீமானுடனே பயணித்து வந்தவர்..

பேட்டி

பேட்டி

இவரது பல பேச்சுக்களும், பேட்டிகளும் சோஷியல் மீடியாவில் வைரலாகும்.. டிவி விவாதங்களில் கட்சியின் பிரதிநிதியாக கலந்து கொண்டு லெப்ட் & ரைட் வாங்குவதில் சளைக்காதவர் கல்யாண சுந்தரம்... திமுக, உட்பட எந்த கட்சி பிரமுகர்களாக இருந்தாலும், கல்யாண சுந்தரம் தன்னுடைய கேள்வியினால் திணறடிக்கும் திறமை படைத்தவர்.

 நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி

இப்படி ஒரு வலுவான நபர், அதுவும் தேர்தல் சமயத்தில், அதிருப்தி காரணமாக சில தினங்களுக்கு முன்பு தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டார்.. பிறகு அதிமுகவில் இணைந்தும் விட்டார்.. கல்யாண சுந்தரத்தை அதிமுகவுக்கு கொண்டு வருவதில், சுனில் டீமுக்கு முக்கிய பங்கு இருப்பதாக சொல்லப்பட்டது.
இப்போது கல்யாண சுந்தரத்துக்கு முக்கிய பொறுப்பை அதிமுக தலைமை தந்துள்ளது..

 விவாதங்கள்

விவாதங்கள்

அது சம்பந்தமாக ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.. அதில், "அதிமுகவின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைப்பதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் பேராசிரியர் ச. கல்யாணசுந்தரம் அவர்கள் இன்று முதல் இணைத்துக் கொள்ளப் படுகிறார், தொலைக்காட்சிகள் மற்றும் சமூகத் தொடர்பு ஊடகங்கள் பேராசிரியர் ச. கல்யாணசுந்தரம் அவர்களையும் பயன்படுத்திக் கொள்ளுமாறுகேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 புது பொறுப்பு

புது பொறுப்பு

ஏற்கனவே இந்த லிஸ்ட்டில் அப்சரா ரெட்டி இணைக்கப்பட்டார்.. இப்போது பேராசிரியர் இணைந்துள்ளார்.. இனி டிவி விவாதங்களில் வழக்கம்போல கல்யாண சுந்தரம் தெறிக்க விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஆனால், யாரை லெப்ட் & ரைட் வாங்குவார் என்றுதான் தெரியவில்லை.. கட்சியை விட்டு வெளியே வந்தவுடன் ஒரு பெரிய லிஸ்ட் போட்டு சீமானை வறுத்தெடுத்தார்.. இப்போது சீமான் ஸ்டாலினை அவரது தொகுதியிலேயே அட்டாக் செய்ய போகிறேன் என்று சொல்லி வருகிறார்..

 பரபரப்பு

பரபரப்பு

இந்நிலையில், கல்யாண சுந்தரத்தின் குறி சீமானாக இருக்குமா? அல்லது அதிமுகவின் எதிர்கட்சியான திமுகவாக இருக்குமா என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. எப்படி பார்த்தாலும் சீமானின் கட்சியில் இருப்பவர்கள் எல்லாருமே நன்றாக பேசக்கூடியவர்.. பெண் வேட்பார்கள் முதல் அனைவருமே மேடைகளில் கர்ஜிக்க கூடியவர்கள்தான்.. அப்படி இருக்கும்போது, டிவி விவாதங்கள் முதல் பிரச்சாரங்கள் வரை பரபரப்புக்கு ஒரு பஞ்சமும் இருக்காது என்றே தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+