புறம்போக்கு நிலத்தில் வீடு.. யாருக்கெல்லாம் சலுகை கிடையாது? கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் அதிரடி
சென்னை: "கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000 வீதம் மொத்தம் ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிப்பதற்காகவும், அவர்களின் நலனை கருத்தில் கொண்டும், தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. அதன்படி, "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

அனைவருக்கும் வீடு: அதேபோல, அனைவருக்கும் 2030ம் வருடத்துக்குள் கான்கிரீட் வீடுகள் கட்டித் தர அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 3500 கோடி ரூபாய் செலவில் 1 லட்சம் கான்கிரீன்ட் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது. இதற்கான நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரு வீட்டிற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அரசு கொடுக்கும்.
இந்த பணம் மொத்தம் 4 பிரிவுகளாக பயனாளிகளின் வங்கி கணக்குக்கே நேரடியாக அரசு அனுப்பி வைக்கும். சொந்தமாக பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட தகுதியானவர்கள். ஆனால், புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டிருப்பவர்கள் இதில் வீடு கட்ட முடியாது. சொந்தமாக கான்கிரீட் வீடு இருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற முடியாது.
கான்கிரீட் கட்டிடம்: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டுவதற்கு குறைந்தபட்சம் 360 சதுர அடி இடம் நிலம் இருக்க வேண்டும். அதில் 300 சதுர அடி கான்கீரிட் கட்டிடம் கட்ட வேண்டும். புதிதாக கட்டப்படும் வீடுகள் அனைத்தும் சிமெண்ட் மூலம் மட்டுமே கட்ட வேண்டும். இந்த வீட்டின் சுவர் மண்சுவர் மற்றும் மண் சாந்து மூலம் கட்டப்படக்கூடாது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயன்பெற குடிசை வீடுகளில் வாழ்பவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே ரூ.3.5 லட்சம் பணம் வீடு கட்ட கிடைக்கும்.
குடிசையில் ஒருபகுதி கான்கீரிட், ஓடு, ஆஸ்பெட்டாஸ் சீட்டு இருந்தாலும் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்படி வீடு கட்ட கட்டுமான பொருட்களுக்கான சிமெண்ட் மற்றும் கம்பி வழங்கப்படும். ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை நிதியாகவும், மீதம் 40 ஆயிரத்திற்கு கட்டுமான பொருட்களாகவும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கலைஞரின் கனவு இல்லம்: இந்நிலையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000 வீதம் மொத்தம் ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அரசால் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, இதுவரை பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.252 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
பழுது நீக்கம்: தற்போது மேலும், ரூ.500 கோடி வழங்கப்பட்டு வீடுகளின் கட்டுமானத்திற்கேற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது. ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகளை சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டு, தேவைக்கேற்ப சிறு மற்றும் பெரும் பழுது நீக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுநாள்வரை 15,350 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசால் ஏற்கனவே, ரூ.150 கோடி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் மேலும் ரூ.450 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டம் - II ன் கீழ், குளங்கள், ஊருணிகள் புனரமைத்தல் உள்ளிட்ட 53,779 பணிகள் கடந்த மூன்றாண்டுகளில் எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.
விரைவில் தொகை: நடப்பாண்டில், இத்திட்டத்தின் கீழ் 2,482 கிராம ஊராட்சிகள் 15,695 பணிகள் எடுக்கப்பட்டு, 12,722 பணிகள், முடிக்கப்பட்டுள்ளன. அரசால் ரூ.347.50 கோடி விடுவிக்கப்பட்டு ஒற்றை சாளர வங்கி கணக்கின் மூலம் நேரடியாக தங்கு தடையின்றி ஒப்பந்ததாரர்களுக்கு முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து பணிகளும் முழுவீச்சில் சிறப்பாக நடைபெற்று வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications