ஸ்ரீலீலா வீட்டில் விசேஷம்.. 3வதாக வந்த பெண் தேவதை! இன்னும் கல்யாணமே ஆகலையே.. குழம்பிய நெட்டிசன்கள்!
சென்னை: தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா, தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தனது வீட்டுக்கு மூன்றாவதாக ஒரு பெண் தேவதை வந்திருப்பதாக அவர் பதிவிட்டு இருக்கும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஸ்ரீலீலாவுக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் 3வதாக குழந்தை எப்படி என கேள்வி எழுந்த நிலையில், அதற்கான விடையும் கிடைத்திருக்கிறது.
தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், கன்னடம் என தென் இந்திய திரையுலகில் தற்போதைக்கு ஸ்ரீலீலா தான் ஹாட் டாபிக். குண்டூர் காரம் படத்தில் அவரது நடனம் வெகுவாக பேசப்பட்ட நிலையில் பல படங்களில் அவர் நடிக்க கூட வேண்டாம் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினால் போதும் என்ற அளவுக்கு ஆகிவிட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா - 2 படத்தில் அவர் நடனமாடியது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பழ மொழிகளில் ஸ்ரீலீலா நடித்து வருகிறார். அந்த வகையில் வெங்கி குடுமலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ராபின்ஹூட் என்ற படத்தில் ஸ்ரீலிலா நடித்திருந்தார்.

ராஜேந்திர பிரசாத், ஷைன் டேம் சாக்கோ, வெண்ணெய்லா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தமிழில் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் அறிமுகமானாலும் தெலுங்கில் தான் பிரபலம்.
முன்னர் வெளியான பகவத் கேசரி, குண்டூர் காரம் ஆகிய படங்கள் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அதிக பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது, அமெரிக்காவில் பிறந்தாலும் பெங்களூருவில் வளர்ந்த ஸ்ரீலிலா மருத்துவப் படிப்பை முடித்தவர் என்பது பலருக்கும் தெரியாது, அதே நேரத்தில் நடனம் மற்றும் நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் தற்போது திரைத்துறையில் காலடி பதித்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்,
இந்த நிலையில் தான் மூன்றாவதாக அவர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து இருக்கிறார். நடிகை ஸ்ரீலீலாவுக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் 2022 ஆம் ஆண்டு இரண்டு மாற்று திறனாளி குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவ்வப்போது அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை ஸ்ரீலிலா வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது மூன்றாவதாக மேலும் ஒரு பெண் குழந்தையை நடிகை ஸ்ரீலிலா தத்தெடுப்பதாக அறிவித்திருக்கிறார்.
இதயத்தின் மீதான படையெடுப்புக்கு எனது வீட்டிற்குள் மேலும் ஒருவர் என அந்த குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். இதை அடுத்து நெட்டிசன்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தாய்மை உணர்வுக்கு எவ்வித தடையும் இல்லை எனவும், மனிதநேயமிக்க உங்கள் செயலை நாங்கள் பாராட்டுகிறோம் என பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், இதே போல் பல குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு உதவ வேண்டுமெனவும் கூறி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.












Click it and Unblock the Notifications