உதயம் தியேட்டரை தொடர்ந்து.. அடுத்த ஷாக்.. சென்னையில் மூடப்படும் இன்னொரு பிரபல தியேட்டர்.. எங்கே?
சென்னை: உதயம் தியேட்டரை தொடர்ந்து சென்னையில் இன்னொரு பிரபல தியேட்டரும் மூடப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னையின் பிரபல தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டர் இடிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த திரையரங்கம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு உள்ளது. பழைய சென்னையின் பிரபலமான பகுதிகளில் உதயம் தியேட்டரும் ஒன்றாகும். சென்னையின் பிரபலமான பகுதிகளில் உதயம் தியேட்டர் ஒன்றாகும். தற்போது அந்த தியேட்டர் இருக்கும் பகுதியை காசாகிராண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது.

இங்கே மிகப்பெரிய 25 மாடி அடுக்கு கட்டிடம் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. அலுவலகம் + குடியிருப்பு பாணியில் இங்கே அடுக்குமாடி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னையில் பல முக்கிய பழைய ஹோட்டல்கள், இடங்கள் வாங்கப்பட்டு உயர் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அப்படித்தான் தற்போது உதயம் தியேட்டரும் வாங்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
ஏன் இடித்தனர்:
கடந்த 2009ல்தான் சென்னையில் உள்ள உதயம் திரையரங்கை அதன் நிறுவன உறுப்பினர் பரமசிவம் பிள்ளை மீண்டும் வாங்கினார். சொத்துக்களை குடும்பத்திற்குள் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக ரூ.80 கோடிக்கு வாங்கினார். தற்போது அந்த தியேட்டர் இருக்கும் பகுதியை காசாகிராண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது. அசோக் பில்லர் அருகே அமைந்துள்ள இந்த திரையரங்கம் 1983 இல் கட்டப்பட்டது.
இன்னொரு தியேட்டர்
உதயம் தியேட்டரை தொடர்ந்து சென்னையில் இன்னொரு பிரபல தியேட்டரும் மூடப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வடசென்னையின் முதல் ஏசி தியேட்டரான பெரம்பூரில் உள்ள ஸ்ரீ பிருந்தா தியேட்டர் மூடப்பட உள்ளது.
வட சென்னையின் முதல் ஏசி திரையரங்கமாக இருந்த 1,170 இருக்கைகள் கொண்ட திரையரங்கம் அடுத்த சில தினங்களில் மூடப்படவுள்ளது. இங்கே பெரிய அடுக்குமாடி குடியிருப்பு + கமர்ஷியல் கட்டிடம் வர உள்ளது.
தமிழ் சினிமாவின் ஃபிலிம் ரீல் காலத்திலிருந்து டிஜிட்டல் யுகம் வரை பரிணாம வளர்ச்சி கண்ட தியேட்டர் இது. லோகநாதன் என்பவர் மூலம் தொடங்கப்பட்ட இந்த தியேட்டர் 1985 ஆம் ஆண்டு முதல் சினிமா உலகில் உள்ளது.
15 கிரவுண்டு நிலத்தில் பரந்து விரிந்துள்ள ஸ்ரீ பிருந்தா திரையரங்கம், லோகநாதன் மூலம் நிறுவப்பட்டு, நடிகர் ரஜினிகாந்தால் ஏப்ரல் 14, 1985 அன்று திறந்து வைக்கப்பட்டது. சூப்பர் ஸ்டாரின் அனைத்துப் படங்களையும் திரையிட்டதால் ரஜினி தியேட்டர் என்று பிரபலமாக அறியப்பட்டது. மோகன் மற்றும் லட்சுமி நடித்த உதய கீதம்தான் இங்கே வெளியான முதல் படம். டிராகன்தான் தற்போது அங்கே ஓடும் கடைசி படம்.
நான் சிகப்பு மனிதன், மாப்பிள்ளை (244 நாட்கள் ஓடியது), பாண்டியன் (174 நாட்கள்), மற்றும் அண்ணாமலை (150 நாட்கள்) உள்ளிட்ட எண்ணற்ற பிளாக்பஸ்டர்களை இந்த தியேட்டர் வெளியிட்டது.
இது சென்னையின் மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமாக இயங்கும் சினிமா தியேட்டர்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் அதன்பின் பெரிய தியேட்டர்கள் இங்கே வந்துவிட்டது. அதேபோல் பல மல்டிபிளக்ஸ் இங்கே வந்துவிட்டது. இதனால் இந்த தியேட்டரின் மவுசு குறைந்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications