தளபதி விஜய் என்னோட பேவரைட்! அரசியல் பயணம் வெற்றியடையட்டும்.. ராஜபக்சே மகன் நமல் வாழ்த்து
கொழும்பு: தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துவதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும் இலங்கை எம்பியுமான நமல் ராஜபக்சே தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தனக்கு பிடித்தமான நடிகர் விஜய் என்றும் தனது பதிவில் நமல் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய், அரசியலில் கால் பதித்துள்ளார். தற்போது நடித்து முடித்துள்ள 'ஜனநாயகன்' படம் தான் தனது சினிமா கேரியரில் கடைசி படம் என்றும், அதன் பிறகு முழு நேரமாக அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

ஜனநாயகன் இசைவெளியீட்டு விழா
'ஜனநாயகன்' படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினமே, விஜய் தனி விமானம் மூலமாக மலேசியா சென்றடைந்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 80 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு 6.30 மணியளவில் விஜய் வந்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் வாக் மேடையில் நடந்து சென்ற விஜய், தனது ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். அப்போது அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
மலேசியாவில் விஜய் பேச்சு
விஜய்க்கு வெற்றிப்படங்களை வழங்கிய இளம் இயக்குனர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் விழாவில் பங்கேற்றிருந்தனர். அவர்களுடன் 'ஜனநாயகன்' படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே, நரேன், நாசர், பிரியாமணி மற்றும் இசையமைப்பாளர் அனிருத், ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். விஜய்யின் பெற்றோரும் இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய விஜய், "ஒரு பெரிய கடலில் ஒரு சிறிய மணல் வீட்டைக் கட்ட வேண்டும் என்ற ஆசையில் நான் சினிமாவுக்குள் நுழைந்தேன். ஆனால் என் ரசிகர்கள் அதை ஒரு பெரிய கோட்டையாக மாற்றிக் காட்டினார்கள். நான் பல போராட்டங்களை சந்தித்துத்தான் இந்த நிலையை அடைந்திருக்கிறேன்.
நன்றிக் கடனை தீர்த்து விட்டுத்தான்
கடந்த 30 வருடங்களாக என் ரசிகர்கள் என்னுடன் நின்றனர். இப்போது, அடுத்த 30 வருடங்களுக்கு அவர்களுடன் நான் நிற்க விரும்புகிறேன். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன். வெறும் நன்றியை வாய் வார்த்தையாக சொல்பவன் அல்ல இந்த விஜய், என் நன்றிக் கடனை நிச்சயம் தீர்த்து விட்டுத்தான் செல்வேன்" என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
விஜய்யின் கடைசி படத்தின் இசை வெளியீட்டு விழா என்பதால், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும் நெகிழ்ச்சியுடன் நேற்றைய இசை வெளியீட்டு விழா தொடர்பான காட்சிகளை பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல, சினிமா துறையினரைத் தாண்டி பல்வேறு தரப்பினரும் விஜயின் புதிய அத்தியாயத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் வெற்றி பெற வாழ்த்துகள்
அந்த வகையில், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நமல் ராஜபக்சே தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
"திரைத்துறையில் விஜய்யின் ஆற்றலை அனைவரும் அறிவோம். சினிமா பயணத்திற்கு முடிவுரை எழுதிவிட்டு புதிய பயணத்தை தொடங்கியுள்ளார் விஜய். சினிமா அவரை ரொம்பவே மிஸ் செய்யும். எதிர்வரும் பயணத்தில் விஜய் வெற்றி பெற வாழ்த்துகள்" என்று தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார்.
-
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்












Click it and Unblock the Notifications