ஸ்டாலினுக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங். வாழ்த்து! இலங்கைக்கு வர அழைப்பு!!
சென்னை: லோக்சபா மற்றும் சட்டசபை இடைத் தேர்தல்களில் வென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நல்லெண்ணப் பயணமாக இலங்கைக்கு ஸ்டாலின் வருகை தர வேண்டும் என்றும் ஹக்கீம் அழைப்பும் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலினுக்கு ரவூப் ஹக்கீம் அனுப்பிய வாழ்த்துச் செய்தி:

தாங்கள் வெற்றிபெற்றவுடனேயே எனது டுவிட்டர் தளத்தின் ஊடாக வாழ்த்தினை பதிவிட்டிருந்த போதிலும், அதுதொடர்பில் தனிப்பட்ட வாழ்த்துச் செய்தியொன்றை விடுப்பது சாலப்பொருத்தமெனக் கருதுகிறேன்.
தி.மு.க. கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியுள்ள அதேவேளை, தாங்கள் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் தி.மு.க. வெற்றிபெற்றிருப்பது உங்கள் தலைமைத்துவத்தின் வல்லமையை நிரூபித்துக்காட்டியுள்ளது.
கருணாநிதியின் மறைவின் பின்னர், பொருத்தமான ஒருவரின் கரங்களில் கட்சி ஒப்படைக்கப்பட்டிருப்பது தற்கால தேர்தல் முடிவுகள் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. எதிர்கால தேர்தல்களிலும் தி.மு.க. மேலும் பல வெற்றிகளைப் பெற்று ஆட்சிபீடமேறுவதற்கு இந்த வெற்றிகள் கட்டியம் கூறிநிற்கின்றன.
ஜூன் 9ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ள கருணாநிதியின் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழகம் வர எண்ணியுள்ளேன். அப்பொழுது தங்களையும், வெற்றிபெற்ற உறுப்பினர்களையும் நேரடியாக சந்தித்து கலந்துரையாட ஆவலாக உள்ளேன்.
அதேபோன்று, தாங்கள் இலங்கைக்கு நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கிறேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தி.மு.க. கூட்டணியில் இராமநாதபுரம் தொகுதியில் வெற்றிபெற்ற கே. நவாஸ்கனிக்கும் உங்களின் தலைமைத்துவம் உந்துசக்தியாக இருந்தாக அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
அத்துடன், தமிழக முஸ்லிம்களையும் வாஞ்சையுடன் அரவணைத்துச் செல்லும் தங்களது மனப்பான்மை மெச்சத்தக்கது. இவ்வாறு ஹக்கீம் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications