அத்துமீறிய இலங்கை கடற்படை! எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 25 மீனவர்கள் சிறைபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் காரைக்கால் மீனவர்கள் 25 பேரை கைது செய்துள்ளது. 2 விசைப்படகுடன் கைதான 25 மீனவர்கள் காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். விசாரணைக்கு பிறகு மீனவர்கள் யாழ்ப்பாணம் மீனவளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவம் நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வினை காண மீனவர்களும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Sri Lankan Navy fishermen Karaikal

தமிழக முதல்வர் ஸ்டாலினும் மீனவர்கள் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி வருகிறார். இந்த சூழலில் காரைக்கால் மீனவர்கள் 25 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.

2 விசைப்படகுகளுடன் மீன்பிடிப்பதற்காக காரைக்கால் மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளனர். இந்த நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது.

தொடர்ந்து 2 விசைப்படகுடன் கைதான 25 மீனவர்கள் காங்கேசன் துறைமுகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். விசாரணைக்கு பிறகு மீனவர்கள் யாழ்ப்பாணம் மீனவளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+