இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக 2ம் வாக்கு எண்ணிக்கை? எப்படி நடக்கும் தெரியுமா?
சென்னை: இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக 2ம் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதல் வாக்கு எண்ணிக்கையில் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை பெறவில்லை. பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் 2ம் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
வாக்காளர்கள் வாக்குச்சீட்டில் இரண்டாவது விருப்பமாக தேர்வு செய்த எண்ணிக்கை நடக்க உள்ளது. 3ம், 4ம் இடம் பிடித்தவர்களுக்கு வாக்களித்தவர்கள் தேர்வு செய்த 2ம் விருப்பம் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்

அதாவது இப்போது முதல் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்த அனுர திசநாயக்க மற்றும் இரண்டாம் இடம் பிடித்த சஜித் பிரேமதாசாவுக்கு விழுந்த வாக்குகள் அப்படியே இருக்கும்.
இது போக ரணில் உள்ளிட்ட 3ம், 4ம் இடம் பிடித்தவர்களுக்கு வாக்களித்தவர்களில் யாரெல்லாம் இரண்டாவது விருப்பமாக அனுர திசநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசா தேர்வு செய்துள்ளனர் என்று பார்க்கப்படும். அனுர திசநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசா ஆகியோரை இரண்டாவது தேர்வாக தேர்வு செய்தவர்கள் வாக்குகள் மட்டுமே 2வது எண்ணிக்கையில் கணக்கில் எடுக்கப்படும்.
ஏற்கனவே அனுர திசநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசா ஆகியோர் பெற்ற வாக்குகளோடு இந்த வாக்குகள் சேர்க்கப்படும். இறுதி எண்ணிக்கையில் அதிக வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
அதாவது முதலிடம் பிடித்த அனுர திசநாயக்க மற்றும் இரண்டாம் இடம் சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையில் மட்டுமே இப்போது போட்டி. இதனால் மற்ற வேட்பாளர்கள் நீக்கப்படுவார்கள். இந்த மற்ற நீக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களின் இரண்டாம் தேர்வு யார் என்று பார்க்கப்படும். அந்த இரண்டாம் தேர்வு வாக்குகளில் யாரெல்லாம் அனுர திசநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசா தேர்வு செய்துள்ளனர் என்று பார்க்கப்படும்.
இதில் இறுதி எண்ணிக்கையில் அதிக வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
வாக்கு எண்ணிக்கை விவரம்: இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காட்சிகள் திடீரென மாற தொடங்கி உள்ளன. தொடக்கத்தில் 50%-க்கும் மேல் வாக்குகளைக் கொண்டிருந்த அநுர குமார திசாநாயக்க, தற்போது 39.44% வாக்குகளிலும் சஜித் பிரேமதாசா 33.88% வாக்குகளிலும் உள்ளனர். ரணில் விக்கிரமசிங்க 17.95% வாக்குகள் பெற்றுள்ளனர்
இலங்கை அதிபர் தேர்தலில் முன்னிலையில் உள்ளபோதும் வாக்கு சதவிகிதத்தில் அனுர குமார திசநாயக்க சரிய தொடங்கி உள்ளார். காலையில் 50 விழுக்காட்டிற்கு மேல் முன்னிலை பெற்றிருந்த நிலையில், 11 மணி நிலவரப்படி 42 விழுக்காடாக குறைந்தது. தற்போது 40% க்கும் கீழ் சென்றுள்ளது. 2ஆவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் அங்கே இரண்டாம் விருப்ப வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்க உள்ளன. இலங்கை தேர்தல் விதிப்படி, 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்றவரே வெல்ல முடியும். இறுதிச் சுற்று வரை அவர் 50 சதவிகிதத்தை தொடவில்லை என்றால் Instant Run of Method நடக்கும். அதாவது இரண்டாவது முன்னுரிமை வாக்குகள் எண்ணப்படும். அதாவது 1 ஆப்ஷனாக வாக்காளர்கள் ஒருவரை தேர்வு செய்வார்கள். அதில் பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் இரண்டாவது ஆப்ஷனாக ஒருவரை தேர்வு செய்து இருப்பார்கள்.. அவர்களுக்கான வாக்குகள் எண்ணப்படும்.
இலங்கை தேர்தல் விதிப்படி ஒருவர் அதிபராக 50 சதவிகித வாக்குகளுக்கும் கூடுதலாக பெற வேண்டும். இதனால் அங்கே Instant Run of Method முறையில் வாக்குகளை எண்ண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தேர்தல் அதிகாரிகள் இதற்காக தயாராகி வருகின்றனர். இதனால் தேர்தல் முடிவுகள் நாளை வரை கூட இழுக்கப்படலாம். நாளை வரை கூட வாக்குகள் தொடர்ந்து எண்ணப்படலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications