சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாட்ஸ் ஆப் குரூப் ஆரம்பித்த ப.சிதம்பரம்.. அட்மினாக மருமகள் நியமனம்.. சிவகங்கையில் போட்டியா?

சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி போட்டியிட வாய்ப்பு என கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சிவகங்கையில் ப.சிதம்பரத்தின் மருமகள் போட்டியா?-Dr. Srinidhi may contest to Sivagangai Constitution

    சென்னை: சிவகங்கை தொகுதியை பொறுத்தவரை இப்போதைக்கு ஹாட் நியூஸ் என்ன தெரியுமா? வரும் தேர்தலில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட போவதில்லை என்று பரவலாக பேச்சு எழுந்துள்ளது.

    இந்த முறை திமுக தரப்பில் அதாவது கூட்டணி சார்பாக கார்த்திக் சிதம்பரத்தை களமிறக்க போவதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது சிதம்பரம் மருமகள் ஸ்ரீநிதி போட்டியிட போவதாக ஒரு புதிய தகவல் கிளம்பியுள்ளது.

    சிதம்பரம் தொகுதியில் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டால் நன்றாக இருக்கும் என்று தொகுதிவாசிகளும் கருதுகிறார்களாம். இதனாலதான் அந்த முடிவுக்கு ப.சிதம்பரம் வந்திருப்பதாக ஒருதகவல் கூறுகிறது.

    Read | வட மாநிலத்தவருக்கு தமிழகத்தில் வேலையா.. ரயில்வே துறைக்கு வேல்முருகன் கடும் கண்டனம்

    பாஜக திட்டம்

    பாஜக திட்டம்

    இதை தவிர மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது, ப.சிதம்பரம், கார்த்தி மீது சில புகார்கள் உள்ளன. சிபிஐ விசாரணையும் நடந்து வருகிறது. இவர்களை எப்படியாவது கைது செய்ய பாஜக அரசு மும்முரம் காட்டி வருகிறது. இவர்கள் மட்டும் என்றில்லை, ஆ.ராசா உள்ளிட்டவர்களை குறி வைத்து பாஜக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது.

    ஊழல் குற்றச்சாட்டு

    ஊழல் குற்றச்சாட்டு

    எனவே நாளை விசாரணை முடிவில் பாதகமான தீர்ப்பு வந்தால் அது ஏடாகூடமாகிவிடும் என்பதாலேயே ஸ்ரீநிதியை நிறுத்துவதாக இன்னொரு காரணம் கூறுகிறார்கள். அது மட்டுமல்ல, நாளை ப.சிதம்பரமோ, கார்த்தியோ யார் நின்றாலும், அதிமுக-பாஜக கூட்டணியினர் ஊழல் குற்றச்சாட்டை சொல்லி சொல்லி காட்டியே பிரச்சாரம் செய்வார்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் தெரிகிறது.

    பணி ராஜினாமா

    பணி ராஜினாமா

    ஸ்ரீநிதி அரசியலுக்கு புது வரவு. இவர் ஒரு டாக்டர். சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் பணிபுரிந்தவர். மத்தியில் பாஜக ஆட்சி வரவும், சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் மீதான ஊழல் குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுக்கவும், அச்சுறுத்தல் காரணமாக அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் வேட்பாளராக நிறுத்தினால், வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்படுகிறது. செல்வாக்கு மிக்க குடும்பம். சிதம்பரம் செட்டியார் சமூகம் என்பதால், சாதி ஓட்டுக்கள் எக்கச்சக்கமாகவே விழ வாய்ப்பு உள்ளதால் பலமான வேட்பாளராக திகழ்வார் என்று பார்க்கப்படுகிறது.

    அட்மின்-ஸ்ரீநிதி

    அட்மின்-ஸ்ரீநிதி

    சமீபத்தில் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கட்சி நிர்வாகிகளுக்கு தொகுதி வாரியாக வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி அதன்மூலம் கட்சி தகவல்கள் செய்திகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது குறித்த பயிற்சி தொடர்பான கூட்டம் அது. இதில் ஸ்ரீநிதியும் கலந்து கொண்டார். இதில் ஸ்ரீநிதிதான் அட்மினாக நியமிக்கப்பட்டுள்ளாராம். எனவே அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ஆதரவு வட்டம்

    ஆதரவு வட்டம்

    சிதம்பரம் குடும்பத்தில் இருந்து ஸ்ரீநிதி இப்படி நேரடியாக களத்தில் இறங்கி உள்ளதால், அவர் சிவகங்கையில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற உற்சாகம் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர் வேட்பாளராகிறாரா அல்லது டெக்னிக்கல் வேலையை மட்டும் பார்க்கப் போகிறாரா என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஆனால் ஸ்ரீநிதிக்கு சிவகங்கையில் தனி ஆதரவு வட்டம் உருவாக ஆரம்பித்து விட்டது என்பது மட்டும் உண்மை.

    English summary
    Congress Karthik Chidambaram wife Dr. Srinidhi may contest to Sivagangai Constitution
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X