ஸ்ரீபெரும்பதூரில் அசராமல் அடிக்கும் திமுக.. 2-வது இடத்தில் யாரு தெரியுமா? தந்தி டிவி எக்சிட் போல்
சென்னை: ஸ்ரீபெரும்பதூர் லோக்சபா தொகுதியில் திமுகவின் டிஆர் பாலு எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றே தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. அதாவது திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு சதவிகிதம் 44 ஆக உள்ளது என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் திமுக கூட்டணியே பெரும்பான்மையான இடங்க்களில் வெற்றி பெறும் என்று கணிப்புகள் கூறுகின்றன.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் யாருக்கு வெற்றி பெற வாய்ப்புள்ளது என்ற கருத்த்துக்கணிப்புகளும் வெளியாகியுள்ளன. அந்த வகையில் தந்தி டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஸ்ரீபெரும்பதூர் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீபெரும்பதூர் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங்க் எம்பியாக இருக்கும் டிஆர் பாலுவும் அதிமுகவில் பிரேம்குமாரும் போட்டியிடுகிறார்கள். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. விஎன் வேணுகோபால் (தமாக), ரவிச்சந்திரன் ( நாம் தமிழர் கட்சி) என களத்தில் உள்ளனர். 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்த தொகுதியில் டிஆர் பாலு எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றே கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. அதாவது திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு சதவிகிதம் 44 ஆக உள்ளது. அதிமுகவிற்கு 29 சதவிகிதமும் தமாகவிற்கு 13 சதவிகிதமும் உள்ளதாக தந்திடிவி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
முந்தைய தேர்தல் முடிவுகள்: ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதியில் 8 முறை திமுக வென்றுள்ளது. அந்த வகையில் ஸ்ரீபெரும்பதூர் திமுக கோட்டையாக பார்க்கப்படுகிறது. 1999, 2004- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவை சேர்ந்த ஆ.கிருஷ்ணசாமி தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றார். 2009-ம் ஆண்டு திமுகவை சேர்ந்த டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார்.
2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த கே.என்.ராமசந்திரன் வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திமுகவை சேர்ந்த டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார்.
2004- ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்:
கிருஷ்ணமூர்த்தி (திமுக)- 5,17,617
வேணுகோபால் (அதிமுக): 2,82,271
2009- தேர்தல் முடிவுகள்:
டிஆர் பாலு (திமுக): 3,52,641
பாமக; ஏகே மூர்த்தி (பாமக):3,27,605
தேமுதிக (அருண் சுப்ரமணியன்): 84,530
2014 தேர்தல் முடிவுகள்:
கேஎன். ராமச்சந்திரன் (அதிமுக); 5,45,820
ஜெகத்ரட்சகன் (திமுக); 4,43,174
மதிமுக: மாசிலாமணி: 1,87,094
2019- தேர்தல் முடிவுகள்:
டிஆர் பாலு (திமுக): 7,93,281
வைத்திலிங்க்கம் (பாமக); 2,85,326
ஸ்ரீதர் (மக்கள் நீதி மய்யம்): 1,35,525.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications