உதயநிதி ஸ்டாலின் குறித்து சர்ச்சை வீடியோ வெளியிட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது! சென்னை போலீஸ் அதிரடி
சென்னை: சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 3 ஜீயர்களை அழைத்து பரிகாரம் செய்ததாக சர்ச்சையாக பேசி வீடியோ வெளியிட்ட புகாரில் ஸ்ரீரங்கம் ரங்கராஜனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.
தமிழகத்தில் துணை முதல்வராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் சமீபத்தில் டெங்கு, மலேரியா போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பொருள்படும்படி பேசியிருந்தார்.

உதயநிதியின் இந்த பேச்சு என்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே தான் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் என்பவர் 8 நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பற்றி அவர் பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியது. அந்த வீடியோவில் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் ஜோதிடர் கூறியதால் 2026 சட்டசபை தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக உதயநிதி ஸ்டாலின் 3 ஜீயர்களை அழைத்து பரிகாரம் செய்ததாக கூறி சர்ச்சையை கிளப்பினார்.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டு இருந்தது. இந்த புகாரை தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்நிலையில் தான் இன்று ஸ்ரீரங்கம் ரங்கராஜனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேலும் போலீஸ் வாகனத்தில் அமர்ந்து இருந்தஸ்ரீரங்கம் ரங்கராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛இது சென்னை காவல்துறையா? ஸ்ரீரங்கம் காவல்துறையா என்பது தெரியவில்லை. என்னை இப்போது கைது செய்வதாக கூறி வீட்டுக்கு வந்து அழைத்து செல்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications