அடடே! சென்னை மெட்ரோ கட்டுமானம்.. முக்கிய இடத்தில் வந்த சவால்! இதை யாரும் எதிர்பார்க்கலையே! என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமானம் இப்போது படுவேகமாக நடந்து வருகிறது. இதில் முக்கிய ரூட்டாக கருதப்படும் 5ஆவது வழித்தடத்தில் வெறும் 4 கிமீ தூரத்திற்குக் கட்டுமானத்தில் சவால் நிலவுகிறது.

தமிழ்நாட்டில் சென்னையில் இப்போது நீலம் மற்றும் பச்சை என்று இரு வழித்தடங்களில் விம்கோ நகர் முதல் சென்னை ஏர்போர்ட் வரையிலும் சென்டிரல் முதல் பரங்கி மலை வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது.

இதற்குப் பொதுமக்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகள் வேகமாக நடந்து வருகிறது.. மாதவரம்- சிறுசேரி, பூந்தமல்லி- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் என வழித்தடங்களில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

 St. Thomas Mount Adambakkam stretch metro construction is challenging and will be in 2027

இந்த கட்டுமானம் முழுமையாக நிறைவடைந்தால் சென்னை விரிவான பொது போக்குவரத்தைக் கொண்ட ஒரு நகரமாக மாறும். இதில் 5ஆம் வழித்தடத்தில் தான் இந்த சின்ன பகுதி வருகிறது. வெறும் 4 கிமீ மட்டுமே இருக்கும் இந்தப் பகுதி மட்டும் இந்த வழித்தடத்தில் தாமதமாகவே நிறைவடையுமாம். ஐந்தாம் வழித்தடம் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை அமையும் நிலையில், இந்த பகுதியில் கட்டுமானம் நிறைவடையவில்லை என்றால் சென்னைவாசிகளால் இந்த ரூட்டில் இருந்து முழுமையாகப் பயனடைய முடியாது.

இந்த பகுதியில் கட்டுமானம் நிறைவடையவில்லை என்றால் அண்ணா நகர், வில்லிவாக்கம், முகப்பேர் பகுதிகளில் உள்ள ஐடி ஊழியர்கள் சோழிங்கநல்லூருக்கு மெட்ரோவில் செல்வதில் சிரமம் ஏற்படும். ஐந்தாம் வழித்தடத்தில் பரங்கிமலை முதல் ஆதம்பாக்கம் வரையிலான இந்தப் பகுதியில் தான் கட்டுமானம் நிறைவடையத் தாமதமாகுமாம். கனெக்டிவிட்டியை தாண்டி இந்த இரண்டு ஏரியாவும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் என்பதால் இங்கிருந்தே மக்கள் அதிகமாக மெட்ரோவை பயன்படுத்துவார்கள்.

இதனால் பரங்கிமலை முதல் ஆதம்பாக்கம் வரையிலான இந்த 4 கிமீ மெட்ரோ பாதையை விரைவில் முடிக்க வேண்டியது அவசியம் என்று சென்னை மெட்ரோ அதிகாரிகள் கூறுகின்றனர். சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் இப்போது பரபரப்பாக நடந்து வருகிறது. சுரங்கப்பாதையுடன் ஒப்பிடும் போது மேம்பாலத்தில் அமையும் மெட்ரோ பாதையில் கட்டுமானம் மிக வேகமாகவே நடந்து வருகிறது.

இந்த பரங்கிமலை முதல் ஆதம்பாக்கம் வகையிலான சிறிய பகுதி மேம்பாலமாக அமையும் போதிலும் இதன் கட்டுமானம் கடினமாக இருக்கிறது. மேலும், இது அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதாக உள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இங்கே மெட்ரோ அமையும் இடத்தில் சாலைகள் குறுகலாகவும், நெரிசல் மிகுந்தவையாகவும் உள்ளன.

மெட்ரோ பாதைக்கு மிக அருகிலேயே பல கட்டமைப்புகள் அமைகிறது. எனவே, இந்தப் பகுதியில் கட்டுமானத்தை மேற்கொள்ளும் போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும், முன்மொழியப்பட்ட பறக்கும் ரயில் விரிவாக்கப் பாதை மற்றும் மெட்ரோ ரயில் பாதை என இரண்டும் இந்த பகுதியில் ஒரே பாதையை ஷேர் செய்கிறது. இதனால் நாங்கள் தெற்கு ரயில்வேயுடன் இணைந்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

 St. Thomas Mount Adambakkam stretch metro construction is challenging and will be in 2027

இந்த குறுகிய இடத்தில் இந்தளவுக்குச் சிக்கலான ஒரு கட்டுமானத்தை மேற்கொள்வது அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை. இருப்பினும், 5ஆம் வழித்தடத்தின் பலன்களைச் சென்னை மக்கள் முழுமையாகப் பெற இந்த பகுதி ரொம்பவே முக்கியம் என்பதால் இதில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்த 4 ஆண்டுகளில் இந்த கட்டுமானத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் பணிகள் படுவேகமாக நடந்து வரும் நிலையில், அவை படிப்படியாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். முதலில் உயர்த்தப்பட்ட மேம்பாலத்தில் அமையும் பாதையிலேயே மெட்ரோ சேவை ஆரம்பிக்கும். அதில் 4ஆவது வழித்தடத்தில் அமையும் பூந்தமல்லி முதல் போரூர் வரை முதலில் மெட்ரோ சேவை 2026இல் ஆரம்பிக்கும். இருப்பினும், என்றும், இந்த சிறிய 4 கிமீ பகுதி 2027இல் கட்டி முடிக்கப்படும் என்றே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+