மூத்த குடிமக்களுக்கான தபால் வாக்கு நடைமுறைகளை உன்னிப்பாக கவனிக்க ஸ்டாலின் அட்வைஸ்
சென்னை: 80 வயது மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோயாளிகள் ஆகியோருக்கான தபால் வாக்குகளை பதிவு செய்யும் நடைமுறைகளை உன்னிப்பாக கவனிக்க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பத்திரிகைச் செய்தியில் கூறுகையில் இன்று (05-03-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்களின் கூட்டம் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது.

அதுபோது, நாளை மறுநாள் (07-03-2021) அன்று திருச்சியில் நடைபெறவுள்ள மாபெரும் பொதுக் கூட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தின் "விடியலுக்கான முழக்கம்" என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பொதுக்கூட்டம் காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 8 மணி வரை நடைபெறும் என்றும், அந்தக் கூட்டத்தில் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் - பகுதி - வட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தின் மூலம் கழகத் தலைவர் அவர்கள் அழைப்பு விடுத்தார்.
அதோடு, நடைபெறவுள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ள 80 வயது மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோர் - நோயுற்றவர்களாகச் சந்தேகிக்கப்படுபவர்கள் ஆகியோருக்கான தபால் வாக்குகள் பதிவு செய்யும் நடைமுறைகளை உன்னிப்பாகக் கவனித்து, அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், கழகப் பொதுச் செயலாளர் திரு. துரைமுருகன், கழகப் பொருளாளர் திரு. டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் திரு. கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் திரு. இ. பெரியசாமி, முனைவர் க.பொன்முடி, திருமதி. சுப்புலட்சுமி ஜெகதீசன், திரு. ஆ. இராசா எம்.பி., திரு. அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மாவட்டக் கழகச் செயலாளர்கள் - பொறுப்பாளர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் திரு. பி.வில்சன் மற்றும் திரு. என்.ஆர். இளங்கோ ஆகியோர் பங்கேற்றனர்.
-
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications