ஆன் தி ஸ்பாட்டில் பெர்மிஷன் கிராண்டட்! கைதட்டலை அள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்! ஆரவாரமான வரவேற்பு!
சென்னை: சென்னை ராணி மேரிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, மாணவிகள் ஆரவாரமான உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இதனிடையே அந்த நிகழ்வில் பேசிய போது, ஆன் தி ஸ்பாட்டில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு மாணவிகள் மற்றும் பேராசிரியைகளின் கைதட்டலை அள்ளினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அந்த விழாவில் முதல்வர் ஆற்றிய உரையின் விவரம், சுருக்கமான வடிவில் வருமாறு;

கருணாநிதி பெயர்
கட்டடங்களில் இருக்கும் கலைஞர் பெயரை நீக்குகிற காரணத்தால் மக்கள் மனதில் இருந்து அவரை யாராலும் நீக்கிவிட முடியாது. அவர் கோடிக்கணக்கான மக்களுடைய மனதில் இடம் பிடித்தவர். அவரால் பயன்பெற்ற மாணவர்களின் உணர்வில் இன்றைக்கும் அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அத்தகைய பெருமைக்குரிய கலைஞர் பெயரால் மாளிகை அமைந்திருக்கும் இடம்தான் இந்த ராணிமேரி கல்லூரி.

புதிய அறிவிப்பு
எனவே, மாணவியர்கள் தங்கிப் பயில ஏதுவாக கல்லூரி வளாகத்திற்குள்ளேயே விடுதி கட்டித்தரப்படும் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். (முதலமைச்சர் ஸ்டாலின் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டதும் மாணவிகள், பேராசியர்கள் என பலரும் ஆரவாரமாக கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் வெளிப்படுத்தினர்)

பகுத்தறிவு முக்கியம்
33 மாணவிகளுடன் தொடங்கப்பட்டு, இன்று 5 ஆயிரம் மாணவியருடன் மாபெரும் அளவில் உயர்ந்து நிற்கிறது. மிக உயர்ந்த நோக்கம் இருந்தால்தான் இத்தகைய வளர்ச்சி சாத்தியம். இதே போன்ற உயர்ந்த நோக்கம் கொண்டவர்களாக மாணவியர் அனைவரும் தங்களது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். யார் எதைச் சொன்னாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், பகுத்தறிவோடு கேள்வி கேட்கும், விமர்சிக்கும் அறிவியல் மனப்பான்மையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் பெற்ற பட்டம் முழுமை பெறும்.

முடிவல்ல -தொடக்கம்
நாமும் கல்லூரியில் படித்திருக்கிறோம் - ஒரு பட்டம் வாங்கி இருக்கிறோம் என்று இல்லாமல் வாங்கிய பட்டத்தில் உயர்நிலை எதுவோ அதையும் முயன்று நீங்கள் அடைய வேண்டும். அதன் மூலமாக உச்சமான தகுதியை நீங்கள் பெற வேண்டும். அந்தத் தகுதியின் மூலமாக இன்னும் பலரையும் நீங்கள் வளர்த்தெடுக்க வேண்டும். இன்று பெறும் பட்டம் என்பது முடிவல்ல, தொடக்கம் என்பதை மறக்காதீர்கள்.
-
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications