ராகுலுடன் ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு- சோனியாவின் உடல்நிலை குறித்து விசாரித்தார்
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் உடல்நலம் குறித்து ராகுலிடம் ஸ்டாலின் விசாரித்தார்.
காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்த காலத்தில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் அவர் சிகிச்சை மேற்கொண்டார்.

இதனையடுத்து காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். ஆனால் கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் ராகுல் காந்தி தமது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
அப்போது சோனியா காந்தியை கங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக அக்கட்சியின் செயற்குழு தேர்வு செய்தது. இந்நிலையில் டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு காய்ச்சல்தான் என்றும் மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சோனியா காந்தியின் உடல்நலம் குறித்து ராகுலிடம் ஸ்டாலின் சாரித்தார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications